காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் இம்மாதம் 28ஆம் நாள் வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை, பி.எஸ்.என்.எல். இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, காயல்பட்டினம் தொலைபேசி நிலைய உதவி பொறியாளர் நம்பிராஜனரிடம் கேட்டபோது, பழைய காயல் அருகில் பொதுப்பணிக்காக பொக்லைன் இயந்திரம் கொண்டு வேலை செய்தபோது, பி.எஸ்.என்.எல். கம்பி வடம் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும், 17.00 மணிக்குள் சரிசெய்யப்படும் என்றும் கூறினார்.
19.00 மணியளவில் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் பகுதியில் இதற்கு முன் பி.எஸ்.என்.எல். இணையதள சேவை துண்டிக்கப்பட்டது தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பி.எஸ்.என்.எல். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |