DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆகஸ்ட் 28 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA
சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவ்வழக்கு (APPEAL NO.37/2014 [SZ]) மே 26 அன்று அனுமதிக்காக - நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர்
ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம்,
வழக்கை அனுமதித்து, எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 10, 2014
தேதிக்கு ஒத்திவைத்தது.
இவ்வழக்கு ஜூலை 10 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாகிய ஆறு தரப்புகளில், CHOLAMANDALAM MS RISK
SERVICES LIMITED நிறுவனம் ஆஜராகவில்லை. அந்நிறுவனத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி எம்.சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.
எஞ்சிய ஐந்து எதிர் மனுதாரர்களாகிய மத்திய அரசு (அதன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக செயலாளர்), தமிழக அரசு (அதன்
சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர்), DCW தொழிற்சாலை (அதன் நிர்வாக இயக்குனர்), தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (அதன் உறுப்பினர் -
செயலாளர்), இத்திட்டத்திற்கு - DCW தொழிற்சாலை சார்பில் ஆவணங்கள் தயாரித்த PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED ஆகிய்வர்கள்
சார்பாக அவர்களின் வழக்கறிஞர்கள், பதில்கள் சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கேட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் - வழக்கினை
ஆகஸ்ட் 28, 2014 க்கு ஒத்திவைத்தது.
ஆகஸ்ட் 28 அன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தப்போது, தீர்ப்பாய நீதிபதிகளில் ஒருவரான நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர்
ஆர்.நாகேந்திரன் விடுமுறையில் சென்றுள்ள காரணத்தால், நீதிபதி ம.சொக்கலிங்கம் அறையில் விசாரணை நடந்தது. அப்போது, கடந்தமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED நிறுவனம், தனது சார்பாக வழக்கறிஞரை நியமிப்பதாக கூறியது.
மேலும் - DCW நிறுவனம் மற்றும் அதற்கு ஆவணங்கள் தயார் செய்துக்கொடுத்த PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவனம் ஆகியவை சார்பாக பதில்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மத்திய அரசு (அதன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக செயலாளர்), மாநில அரசு (அதன்
சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர்), தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (அதன் உறுப்பினர் -
செயலாளர்) மற்றும் CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED நிறுவனம் ஆகியோர் பதில்கள் தாக்கல் செய்யாத நிலையில் வழக்கு, நவம்பர் 13 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம்
மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு ஆகியோர்
இவ்வழக்கில் ஆஜராகின்றனர்.
|