ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) திருச்செந்தூர் கடலில்
விசர்ஜனம் செய்யப்படுகிறது.
ஆறுமுகனேரியில் 23 ஆம் ஆண்டு இந்து எழுச்சித் திருவிழா கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 11 அடி உயர வீரவிநாயாகர் சிலை
செந்தில் விநாயகர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 28 ஆம் தேதி ஆறுமுகனேரியில் உள்ள முக்கியமான 25 அம்மன் கோயில்களிலும்
மற்றும் நடராஜர் நகர், பாரதி நகர், அம்பேத்கர் நகர், பேயன்விளை, உள்பட பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில், விநாயகர் சிலைகள்
பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதே போன்று காயல்பட்டினம் கணபதீஸ்வரர் ஆலயம், லட்சுமிபுரம், பாஸ் நகர், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, மன்னராஜா கோயில்
தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை, ஆகிய இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை ஆறுமுகனேரியில் உள்ள 25 அம்மன் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், செந்தில் விநாயகர்
ஆலயம் வந்தடைகிறது.
அங்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடைபெறுகிறது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு நகரின் அனைத்து இடங்களிலும்
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் மூலக்கரை, சண்முகபுரம், நல்லூர், நாலுமாவடி, இடையன்விளை, புன்னைநகர்,
தலைவன்வடலி, ஆத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஆறுமுகனேரி வந்தடையும். பின்னர் ஆறுமுகனேரியில்
இருந்து 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு ஜெயின்நகர், பேயன்விளை வழியாக காயல்பட்டினம் வந்தடையும். காயல்பட்டினத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுடன் இணைந்து ஓடக்கரை வழியாக திருச்செந்தூர் சென்றடையும். அங்கு சிறப்பு புஜையுடன் கடலில்
விசர்ஜனம் செய்யப்படுகிறது.
ஏற்பாடுகளை இந்து முன்னணி வடக்கு ஒன்றியத் தலைவர் ஜி.ராமசாமி, ஒன்றியச் செயலர் முத்துராஜன், பொதுச் செயலர் கசமுத்து, பொருளாளர்
சக்திதாசன், துணைத் தலைவர் ஜெகன், நகரச் செயலர் மணிகண்டன், ராதாகிருஷ்ணன், முத்துக்குமார், பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் செய்து
வருகின்றனர்.
தகவல்:
தினமணி |