ஆறுமுகநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் நடந்தது.
ஆறுமுகநேரியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதூர்தியை இந்து எழுச்சி விழாவாக கொண்டாடி வருகின்றனர். 23வது ஆண்டு இந்து எழுச்சி விழா கடந்த 25ம் தேதி துவங்கியது.
மெயின் பஜார் செந்தில் விநாயகர் ஆலயம் முன்பு 11 அடி உயர வீரவிநாயகர் சிலை பிரதிடை செய்திருந்தனர். இதே போன்று நடராஜநகர், பாரதிநகர், அம்பேத்கார்நகர், காமராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், ராஜமன்னியபுரம், வடக்கு சுப்பிரமணியபுரம், பூவரசூர், லெட்சுமிஅம்மன் கோயில் தெரு, பெருமாள்புரம், கீழநவலடிவிளை, காணியாளர்தெரு, பூபாலாநகர், சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, பேயன்விளை புதூர், கிருஷ்ணாபுரம், பேயன்விளை, உட்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை நடந்தது. மேலும் ஆறுமுகநேரியில் உள்ள முக்கியமான 25 கோயில்களிலும் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடந்து வந்தது.
முன்னதாக ஆறுமுகநேரி பகுதியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்ட்டிருந்த விநாயகர் சிலைகள் செந்தில் விநாயகர் கோயில் முன்பு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் மூலக்கரை, சண்முகபுரம், நல்லூர், நாலுமாவடி, இடையன்விளை, புன்னைநகர், தலைவன்வடலி, ஆத்தூர் குரும்பூர், கயத்தாறு, ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்ட்டிருந்த விநாயகர் சிலைகளும் வந்தன.
பேரணியை ஆறுமுகநேரி நகர்நல மன்ற தலைவர் பூபால்ராஜன் துவக்கி வைத்தார்.
மாலை 4.15 மணிக்கு ஆறுமுகநேரி மெயின் பஜாரில் துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் ஜெயின்நகர், பேயன்விளை, அழகாபுரி, வழியாக ரத்னாபுரி வந்தடைந்தது.
அங்கு காயல்பட்டணம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுடன் இணைந்து காயல்பட்டணம் புதுபஸ் ஸ்டாண்ட், விசாலாட்சி அம்மன் கோயில் தெரு, மன்னராஜா கோயில் தெரு, பூந்தோட்டம, ஓடக்கரை வழியாக திருச்செந்தூர் சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து கடலில் விஜர்சனம் நடந்தது.
விநாயக சதுர்த்தி ஊர்வலம் காயல்பட்டினத்தை எவ்வித பிரச்சனையுமின்றி மாலை 6:45 மணியளவில் கடந்து சென்றது.
விழாவில் நகர பொருளாளர் சக்திதாசன், செயலாளர் முத்துக்குமார், பாஸ்கர், ராதாகிருஷ்ணன். தலைவன்வடலி மகாதேவன், வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், பாஜக நகர தலைவர் மகேந்திரன், ஒன்றிய பொதுச் செயலாளர் தங்கபாண்டியன், ஆட்டோ சங்க தலைவர் செல்வராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விநாயகர் சதூர்த்தி விழா ஊர்வலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துரை மேற்பார்வையில் மதுவிலக்கு ஏடிஎஸ்பி கந்தசாமி, திருச்செந்தூர் டிஎஸ்பி கோவிந்தராஜ், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆறுமுகநேரியில் துவங்கிய விநாயகர் ஊர்வலம் காயல்பட்டணம் கடக்கும் வரை ஆறுமுகநேரி - காயல்பட்டணம் இடையேயான போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
புகைப்படங்களில் உதவி:
ஏ.கே.இம்ரான் |