காயல்பட்டினம் நகராட்சியின் 1வது வார்டு உட்பட தமிழகத்தின் பல உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 28 அன்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 4 வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என்றும், செப்டம்பர் 18 அன்று தேர்தல் நடைபெறும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சியின் வார்டு 1 பகுதி - கோமான் மேலத் தெரு, கோமான் நடுத் தெரு, கோமான் கீழத் தெரு, அருணாச்சலபுரம் மற்றும் கடையக்குடி (கொம்புதுறை) பகுதிகளை அடங்கியதாகும்.
மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920இன் பிரிவு 48 படி கீழ்க்காணும் இரு முக்கிய தகுதிகள் வேட்பாளருக்கு இருக்க வேண்டும்.
(1) வேட்பாளர் பெயர் அந்நகராட்சியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்,
(2) வேட்பாளர் 25 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்கவேண்டும்
அதாவது - ஒரு வார்டு பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் அந்த வார்டினை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் - அந்த வார்டு அடங்கிய நகராட்சியினை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
இது தவிர - தமிழ்நாடு டவுன் பஞ்சாயத், மூன்றாம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிமுறைகள் 2006இன் விதி 24 படி, வார்டு தேர்தலில் வேட்பாளரை முன்மொழியும் நபரின் பெயர், அந்த வார்டு பகுதிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
|