காயல்பட்டினம் நகராட்சியின் 1வது வார்டு உட்பட தமிழகத்தின் பல உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான இடைத்தேர்தல்
ஆகஸ்ட் 28 அன்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 4 வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என்றும், செப்டம்பர் 18 அன்று தேர்தல் நடைபெறும்
என்றும் மேலும் அறிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சியின் 1வது வார்டுக்கான தேர்தலில் நகராட்சி ஆணையர், தேர்தல் அதிகாரியாக (RETURNING OFFICER) செயல்புரிவார். வேட்பு
மனு படிவமும், உறுதிச்சான்று படிவமும் - போட்டியிட விரும்பும் நபருக்கு, நகராட்சியில் வழங்கப்படும்.
ஒரு வேட்பாளர் சார்பாக, 4 வேட்பு மனுக்கள் வரை தாக்கல் செய்யப்படலாம் (தமிழ்நாடு டவுன் பஞ்சாயத், மூன்றாம் நிலை நகராட்சிகள்,
நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிமுறைகள் 2006இன் விதி 24(5)). தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் - தனது மனுவினை,
அதற்கான படிவமான படிவம்-3 யை நிரப்பி, தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
படிவம் - 3
படிவம் 3-ன்றினை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
விதி 25(1)படி, வார்டு உறுப்பினர், வைப்பு தொகையாக - தனது விண்ணப்பத்துடன், ரூபாய் 1000 செலுத்தவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட
மனுக்கள், ஒரு வேட்பாளர் சார்பாக தாக்கல் செய்யப்பட்டாலும், ஒரு முறை - வைப்பு தொகை செலுத்தினால் போதும்.
விதி 25(3)படி, இந்த வைப்பு தொகை, வெற்றிப்பெற்ற வேட்பாளருக்கும் மற்றும் பதிவான மொத்த செல்லத்தக்க வாகுகளில ஆறில் ஒரு பங்குக்கு
கூடுதலாக பெற்ற வேட்பாளருக்கு மட்டும் திருப்பி வழங்கப்படும்.
மேலும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள்படி, வேட்பு மனுவுடன், வேட்பாளர் குறித்த கல்வி, சொத்து மற்றும் வழக்கு விபரங்கள் அடங்கிய உறுதிச்சான்று
(AFFIDAVIT) இணைத்து சமர்ப்பிக்கவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள், ஒரு வேட்பாளர் சார்பாக தாக்கல் செய்யப்பட்டால், ஒரு முறை -
உறுதிச்சான்று சமர்ப்பித்தால் போதுமானது.
மனுவுடன் இணைக்கப்படவேண்டிய உறுதிச்சான்று (AFFIDAVIT) (தமிழில்)
உறுதிச்சான்று (தமிழில்) படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
மனுவுடன் இணைக்கப்படவேண்டிய உறுதிச்சான்று (AFFIDAVIT) (ஆங்கிலத்தில்)
உறுதிச்சான்று (ஆங்கிலத்தில்) படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
விதி 24(4) படி, வேட்பு மனுவினை பெறும்போது, தேர்தல் அதிகாரி - வாக்காளர் பட்டியலில் உள்ளப்படி, பெயர்களும், வரிசை எண்ணும்
நிரப்பப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். அதில் ஏதும் முரண்பாடு தென்பட்டால், வேட்பு மனு தாக்கல் செய்தவரை - அதனை திருத்த
அறிவுறுத்தவேண்டும்.
தேர்தல் அலுவலர் - தினசரி பெறப்படும் விண்ணப்பங்கள் விபரங்களை, படிவம் 4இல் பதிவு செய்து, தகவல் பலகையில் ஒட்டவேண்டும்.
படிவம் 4
மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் உறுதிச்சான்று படிவ நகல் - தகவல் பலகையில் ஒட்டப்படுவது மட்டும் அல்லாமல், அதன்
நகல் எதிர் வேட்பாளர் மற்றும் ஊடகங்களுக்கும் வழங்கப்படவேண்டும் என தேர்தல் ஆணையத்தின் - ஆகஸ்ட் 5, 2014 தேதியிட்ட ஆணை எண்
S.O.No. 6/2014/TNSEC/PE-1 தெரிவிக்கிறது.
|