| |
செய்தி எண் (ID #) 14433 | | | செவ்வாய், செப்டம்பர் 2, 2014 | ரமழான் 1435: அஹ்மத் நெய்னார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2043 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவையடுத்து, சதுக்கைத் தெரு துவக்கத்திலேயே அமைந்துள்ளது அஹ்மத் நெய்னார் பள்ளி.
நிர்வாகம்:
ஹாஜி எஸ்.கே.ஜெய்னுல் ஆப்தீன் பள்ளியின் தலைவராகவும், ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஹாஜி அப்துஸ்ஸலாம், ஹாஜி ஊண்டி கிழுறு முஹம்மத் ஆகியோர் தலைவருக்குத் துணையாகவும் நிர்வாகச் சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் - பிலால்:
அபுல்ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ பள்ளியின் இமாமாகவும். ஜெஸ்மின் இஸ்மாஈல் அதன் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகையில் திருமறை குர்ஆன் முழுதும் ஓதி முடிக்கப்படுகிறது. காயல்பட்டினம் நெய்னா தெருவைச் சேர்ந்த ஷேக் நூருத்தீன் என்பவரது மகன் ஹாஃபிழ் தைக்கா தம்பி, கி.மு.கச்சேரி தெருவைச் சேர்ந்த டூட்டி செய்யித் முஹம்மத் என்பவரது மகன் ஹாஃபிழ் டூட்டி ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ ஆகியோர் நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையை வழிநடத்தினர்.
ரமழான் மாதம் முழுக்க இஷா தொழுகை 20.45 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.00 மணிக்கும் துவங்கின.
இஃப்தார் ஏற்பாடுகள்:
இப்பள்ளியில் ஆண்டுதோறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக நோன்புக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. ஊற்றுக்கஞ்சி வினியோகம் கிடையாது. நாள்தோறும் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகளில் 100 முதல் 125 பேர் வரை கலந்துகொண்டனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், வடை உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
10.07.2014 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள்:-
அஹ்மத் நெய்னார் பள்ளியின் வரலாறு அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அஹ்மத் நெய்னார் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நகர பள்ளிகளில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|