காயல்பட்டினம் தீவுத்தெரு பெண்கள் தைக்காவில் இயங்கி வரும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரிக்கு நிர்வாகத் தலைவர், துணை முதல்வர் ஆகியோர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான கூட்டம், இம்மாதம் 01ஆம் நாள் திங்கட்கிழமை 20.30 மணியளவில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, கல்லூரியின் புதிய முதல்வராக - தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ - அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் புதிய நிர்வாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கல்லூரியின் நிர்வாகத் தலைவராக ஏற்கனவே பொறுப்பு வகித்த மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஜுமானீ அவர்கள் காலமானதைடுத்து, வெற்றிடமாக இருந்த அப்பொறுப்புக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக் கல்லூரியின் பேராசிரியரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ அதே பொறுப்பிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகத் தலைவர், துணை முதல்வருக்கு கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தகவல்:
P.M.N.ரியாஸுத்தீன்
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 10:06 / 03.09.2014] |