காயல்பட்டினம் தீவுத்தெரு பெண்கள் தைக்காவில் இயங்கி வரும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா உட்பட ஐம்பெரும் விழாக்கள் இம்மாதம் 05, 06, 07 (வெள்ளி, சனி, ஞாயிறு) நாட்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த நிகழ்முறை விளக்கம் வருமாறு:-
தகவல்:
P.M.N.ரியாஸுத்தீன்
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியில் இதற்கு முன் நடைபெற்ற பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:...வாழ்த்துக்கள் posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[03 September 2014] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36965
அஸ்ஸலாமு அலைக்கும்.
வல்ல நாயன் அருளால் , அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா உட்பட ஐம்பெரும் விழாக்கள் நனி சிறப்புடன் இனிதே நல்ல முறையில் நடந்து முடிய எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .
இந்த வருடம் சனது பட்டம் பெற உள்ள அணைத்து ஆலிமா & ஹாபிழா மாணவிகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் & பாராட்டுகளும் உரித்தாகுக .
வல்ல நாயன் அருளால் இந்த அருமையான பாக்கியம் நிறைந்த ஆலிமா , ஹாபிழா பட்டம் பெரும் நீங்கள் , உங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் , நலன்களும் பெற்று வாழ வல்ல நாயனை வேண்டுகிறேன் . ஆமீன் .
நீங்கள் கற்ற இந்த அருமையான பாடங்களை , அறிவுகளை பிற
மாணவிகளுக்கும் கற்று கொடுத்து , நமது ஊரில் இன்னும் நிறைய ஆலிமாகளையும் , ஹாபிழா களையும் உருவாக்குங்கள்.
2. அக்மார்க் கல்லூரி posted byNIZAR (kayalpatnam)[04 September 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36985
காயல்பட்டிணத்தில் ஆண்கள் மட்டுமே ஆலிமாக,ஹாபிலாக ஆகும் வாய்ப்பு இருந்தது.அப்பொழுது பெண்கள் மகளிர் இஸ்லாமிய கல்லூரி இல்லை.அந்த நிலையை மாற்றி 1983 வருடதில் நகரின் முதல் மகளிர் இஸ்லாமிய கல்லூரியாக அமைந்ததுதான் இந்த அருசுள் ஜன்னஹ் மகளிர் இஸ்லாமிய கல்லூரியாகும்.அரூசுள் ஜன்னஹ் ஒரு அதிசயம்.
சப்தமில்லாமல்,பரபரப்பு,விளம்பரம் இல்லாமல் சாதனை படைத்தது வருகிறது.இது சுன்னத்வல் ஜமாஅத் உயரிய கொள்கையில் அமைந்த அக்மார்க் இஸ்லாமிய கல்லூரியாகும்.இதுவரை 314 ஆலிமாக்களையும் 46 ஹாபிலாக்களையும் உருவாக்கி உள்ளது.
இதன் பத்தாவது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டும் 28 ஆலிமாக்கலும்,9 ஹாபிலாக்களும் சனது பெற உள்ளார்கள்.இங்கு உருவாகிய ஆலிமாக்கள் தங்கள் பகுதிகளில் மார்க்க கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தி மார்க்க சேவை ஆற்றி வருகிறார்கள்.வல்ல இறைவன் இந்த கல்லூரி
யின் வளர்ச்சியை மேலோங்க செய்வானாக என இறையிடம் இறைஞ்சுவோம்,,,,
3. Re:...அரூசுள் JANNAAH posted byNaseem Shihabudeen (SRILANKA)[04 September 2014] IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 36987
அஸ்ஸலாமு அலைக்கும்!
அரூஸுல் ஜன்னாஹ் மத்ரஸத்துன்நிஸ்வான் அரபிக்கல்லூரியின் ஐம்பெரும் விழாக்கள் அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெறுவதற்கு எல்லாம்வல்ல இறைவன் துணைபுரிவானாக ஆமீன்.
நமதூரில் ஆலிமாக்களையும் ஹாபிழாக்களையும் உருவாக்கும் நோக்கத்துடன் முதன்முதலாக ஆரம்பம் செய்யப்
பட்ட பெண்கள் மத்ரஸா என்பது வரலாறு கண்ட உண்மை.
இதுவரை பல ஆலிமாக்களையும் ஹாபிழாக்களையும்
உருவாக்கியதில் வெற்றி கண்டிருக்கிறது. இந்நிறுவனத்தை ஆரம்பித்தவர்கள் அதில் பணிபுரிபவர்கள் உறுப்பினர்
கள் ஆசிரியர்கள் என அனைவரும் தன்னலமில்லாது பொதுநலம் கருதி செயல்பட்டு சேவையாற்றிக்கொண்டிரு க்கிறார்கள்.
இங்கு தீனோடு இணைந்து தஃவத் பணியும் நடைபெறுகிறது.கல்வி பயிலக்கூடிய மாணவிகளுக்கும்
தஃவத்தின் அவசியம் பற்றி வலியுறுத்தப்படுகிறது.தஃவத் மூலமாகத்தான் தக்வா ஏற்படுகிறது.
தற்போது இம்மத்ரஸாவிற்கு முதல்வராகவும் துணை முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கூட தஃவத்
பணியில் முன்னிர்ப்பவர்கள்.அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்த தலைசிறந்த உலமாக்கள்.அவர்களுடைய மார்க்க
சேவைகள் இம்மத்ரஸாவிற்கு மென்மேலும் அத்தியாவசியம். அவர்களின் மார்க்கப்பணிகள் தொடர்ந்திடவும்
இந்நிறுவனத்தின் நிருவாகிகள் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் இதற்காக உதவி புரிபவர்கள் யாவரின் சேவைகள்
தொடர்ந்திடவும் இன்னும் அதிகளவில் இங்கு மாணவிகள் கல்வி பயின்று குர்ஆணை மனனம் செய்து
"ஆலிமா ஹாபிழா" சனதுகள் பெற்று வெளியேற எல்லாம்வல்ல இறைவன் நல்லருள் செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross