காயல்பட்டினம் விசாலட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் புகாரீ (40).ஆட்டோ மற்றும் லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செய்யதலி ஃபாத்திமா (36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
மூன்று நாட்களுக்கு முன்னர்தான் விசாலட்சுமி அம்மன் கோவில் தெரு வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். செய்யதலி ஃபாத்திமா புதன்கிழமை (செப்டம்பர் 03) இரவு, மாடியில் காயப் போட்டிருந்த பாயை எடுக்கச் சென்றுள்ளார். காயப்போட்ட கொடிக்கம்பி அருகில் வீட்டு மின் இணைப்பு கம்பி சென்றுள்ளது. மின்கம்பி கொடி கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் பாயை எடுக்கப் போன அவர் மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே இறந்து விட்டார்.
புகாரி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆத்தூர் ஆய்வாளர் சோமசுந்தரம் விசாரணை செய்து வருகின்றார். காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
3. Re:... posted byMauroof (Dubai)[05 September 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37017
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
6. Re:... அஸ்ஸலாமு அலைக்கும். posted byS.H.S.IBRAHIM (RIYADH. K.S.A.)[06 September 2014] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37057
"அஸ்ஸலாமு அலைக்கும்."
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,
இறைவன் அவர்கள் குடும்பத்தினருக்கு சப்ரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை கொடுப்பானாக,மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்வு செம்மையுடன் அமைய இறையிடம் வேண்டுவோமாக...... ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!
ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
7. Re:... posted byAbdul Hadhi (jeddah)[07 September 2014] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37072
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம்ம அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross