காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. நிறுவனம் சார்பாக, காயல்பட்டினம் கொம்புத்துறை (கடையக்குடி) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகம் வழங்கும் விழாவும், கொம்புத்துறை மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கம் சார்பாக கொம்புத்துறை விளையாட்டு மைதானம் சீர் செய்யப்பட்டு மைதானத்தில் அமைத்துக்கொடுக்கப்பட்ட கான்க்ரீட் க்ரிக்கெட் ஆடுதளம் (பிட்ச்) துவக்க விழாவும், 14.08.2014 அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கொம்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை பூங்கோதை தலைமை வகித்தார். டிசிடபிள்யு. நிறுவன நிர்வாக உதவித்தலைவர் (பணியகம்) ஜெயக்குமார் கலந்துகொண்டு மாணவ-மாணவியருக்கான இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கியதோடு, கான்கிரீட் க்ரிக்கெட் பிட்ச் மைதானத்தையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் டி.சி.டபிள்யு. நிறுவன நிர்வாக உதவித் தலைவர் சுபாஷ் டாண்டன், பொது மேலாளர் (மனித வளம்) பசுபதி ஆகியோருடன் கொம்புத்துறை ஊராட்சி மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கத்தினரும் கலந்து கொண்டனர். |