காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற வெற்றிடங்களுக்கும் தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று மாலை 3 மணி வரை, 5 பேர் - மனு தாக்கல் செய்திருந்தனர். மனு தாக்கல் செய்திருந்த
ஐந்து பேரின் விபரங்கள், அன்று மாலை - படிவம் 5இல் வெளியடப்பட்டது. அதில் - இன்று (செப்டம்பர் 5) காலை 11 மணிக்கு, மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை நடந்த பரிசீலனையின் போது - ம.அமலக்கனி மற்றும் எஸ்.ஐ.அஸ்ரப் ஆகிய இருவரின் வேட்பு மனுக்கள் குறித்தும், மாற்று தரப்பில் சில ஆட்சேபனைகள் எடுத்து வைக்கப்பட்டன.
பரிசீலனையின் முடிவில் அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
விதிமுறை 27(9) படி தகுதியான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளவர் பட்டியல் படிவம் 6
பரிசீலனைக்கு பிறகு வெளியாகியுள்ள வேட்பாளர்கள் விபரங்களை தொடர்ந்து, அடுத்தக்கட்டம் - போட்டியிட விருப்பமில்லாத வேட்பாளர்கள் தங்கள் மனுவினை செப்டம்பர் 8 திங்கட்கிழமை மாலை 3 மணிக்குள் வாபஸ் பெறுவதாகும்.
அதற்கான படிவத்தை நிரப்பி (படிவம் எண் 7), தான் நேரடியாகவோ, தன்னை முன்மொழிந்தவர் மூலமா - தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.
அந்த படிவத்தை பெற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர், படிவம் எண் 8 மூலம், வாபஸ் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் விபரத்தையும், படிவம் எண் 9 மூலம், போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களையும் தெரிவிப்பார்.
தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் விபரத்தை வழங்கும் படிவம் 8 மாதிரி
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் - அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களுடன் - படிவம் 9 மாதிரி
[செய்தி திருத்தப்பட்டது @ 5:30 pm / 05.09.2014]
தகவலில் உதவி:
'தமிழன்' முத்து இஸ்மாயில் |