காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற
வெற்றிடங்களுக்கும் தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான செப்டம்பர் 4 வரை, 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் -
(1) ம.அமலக்கனி [அ.தி.மு.க.]
(2) எஸ்.ஐ.அஸ்ரஃப் [சுயேட்சை]
(3) எஸ்.ஐ.மொகுதூம் அப்துல் காதர் [சுயேட்சை]
(4) எஸ்.ஐ. கஸ்ஸாலி மரைக்கார் [சுயேட்சை]
(5) எம்.செந்தமிழ் செல்வன் [சுயேட்சை]
-- ஆகியோர் ஆவர்.
இவர்களில் எஸ்.ஐ.மொகுதூம் அப்துல் காதர், எஸ்.ஐ. கஸ்ஸாலி மரைக்கார் ஆகியோர் கோமான் ஜமாஅத் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள
வேட்பாளருக்கு மாற்று வேட்பாளர்கள் என்றும், எம்.செந்தமிழ் செல்வன், அ.தி.மு.க. வேட்பாளர் ம.அமலக்கனிக்கு மாற்று வேட்பாளர் என்றும் அறியப்படுகிறது.
செப்டம்பர் 5 அன்று நடந்த பரிசீலனையின் இறுதியில் அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு,
படிவம்-6இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வேட்பு மனு பரிசீலனையின்போது - அ.தி.மு.க. வேட்பாளரின் மனு குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், அவர் 2011 உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு, தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்பட்டதாகத் தெரிகிறது. கணக்கு தாக்கல் செய்து விட்டதாகவும், அதனால்தான் தனது வைப்பு தொகையான 1000 ரூபாய் திருப்பி தரப்பட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
நகராட்சி வங்கிக் கணக்கில் ம.அமலகனிக்கு வைப்புத் தொகை திரும்ப வழங்கப்பட்டதற்கான பதிவு
கோமான் ஜமாஅத் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் மனு குறித்து அ.தி.மு.க. சார்பாக சில கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது. வேட்பாளர் எஸ்.ஐ. அஸ்ரஃபுக்கு இரு வாக்காளர் அட்டைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வேட்பாளர் தரப்பில் - இரண்டில் ஒன்றினை நீக்க செப்டம்பர் 03 அன்று சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரியான தாசில்தார் நல்லசிவனிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த வேட்பாளர் இணைத்துள்ள ஆவணம் - ஒப்புதல் கடிதம்தான்
என்றும், அதில் எந்தப் பதிவை நீக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை என்றும் அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து - தேர்தல் அதிகாரியான நகராட்சி ஆணையர், திருத்தப்பட்ட கடிதத்தை சமர்ப்பிக்கும்படி கோரியதன் அடிப்படையில், வேட்பாளர் அஸ்ரப் சார்பாக, தாசில்தாரிடம் இருந்து மீண்டும் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அ.தி.மு.க. சார்பில் - ஒப்புதல் கடிதம் மட்டுமே செப்டம்பர் 05 தேதியில் சமரிப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விதிகள் படி நீக்கப்பட்ட ஆணை வழங்கப்பட வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.
வேட்பு மனுக்கள் பெறுவது குறித்த விதிகளை விளக்கும் படிவம் 1
பரிசீலனையின் முடிவில் அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இருப்பினும் - அ.தி.மு.க. தரப்பில், அவசியம் ஏற்பட்டால் நீதிமன்ற உதவியை நாடப் போவதாகக் கூறப்படுகிறது.
ஒரு வாக்காளர் ஒரு முறைதான் பதிவு செய்திருக்க வேண்டும் என கூறும் விதி
THE REPRESENTATION OF THE PEOPLE ACT, 1950
18. No Person to be registered more than once in any constituency. —No person shall be entitled to be registered in the
electoral roll for any constituency more than once.
பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பம் பெறப்பட்டவுடன் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்த தேர்தல் ஆணைய கையேடில் உள்ள பதிவு
Hand Book for Electoral Registration Officers
CHAPTER VIII - CONTINUOUS UPDATION (BETWEEN REVISIONS)
31. The ERO immediately on receipt of an application for deletion of an entry except on the ground that a person is dead, should paste one copy thereof in the notice board of his office together with a notice inviting objections, if any, to the deletion of the name within period of 7 days from the date of such posting. A notice should also be served
upon the person concerned and also to the person presenting the application for deletion
mentioning the date on which the application will be heard. The publication of the notice
should not be postponed to the next working day except in unavoidable circumstances. In
calculating the notice period of 7 days the date of publication of the notice should be
excluded and if last date so calculated falls on a Sunday or other public holiday, the next
working day should be specified as the last day for making objections, if any. No specific
form is prescribed for making such objection in response to the above notice. The ERO
should simultaneously take steps for verification. He should conduct a summary enquiry
after the expiry of the period of notice and thereafter pass appropriate orders.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை இறுதி நாள். நாளை மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அதற்கான படிவத்தை நிரப்பி (படிவம் எண் 7), வேட்பாளர் நேரடியாகவோ, தன்னை முன்மொழிந்தவர் மூலமா - தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.
அந்த படிவத்தை பெற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர், படிவம் எண் 8 மூலம், வாபஸ் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் விபரத்தையும், படிவம் எண் 9 மூலம், போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களையும் தெரிவிப்பார்.
தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் விபரத்தை வழங்கும் படிவம் 8 மாதிரி
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் - அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களுடன் - படிவம் 9 மாதிரி
|