ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில், மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.2500/- என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 07ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், ஐ.ஐ.எம். உள்ஹிய்யா ஏற்பாட்டுக் குழு தலைவராக எம்.ஏ.புகாரீ (48) தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, மேற்படி பங்குத்தொகையும் நிர்ணயிக்கப்பட்டது.
பங்கு சேர விரும்புவோர் - அதன் பொறுப்பாளர்களான
ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ (தொடர்பு எண்: +91 74185 98593),
எம்.ஏ.புகாரீ (48) (தொடர்பு எண்: +91 98651 30455)
‘ஜப்பான்’ முஹம்மத் முஹ்யித்தீன் (தொடர்பு எண்: +91 99525 01493)
ஆகியோருள் ஒருவரிடம் நேரில் பணம் செலுத்தி, தமது பங்கை உறுதி செய்துகொள்ளுமாறு ஐ.ஐ.எம். நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
குளம் K.S.முஹம்மத் யூனுஸ்
ஐ.ஐ.எம். சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) வெளியிடப்பட்ட உள்ஹிய்யா அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|