இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 13ஆம் நாளன்று தூத்துக்குடியில் கூடுகிறது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர் தலைமையில், மாவட்ட - நகர நிர்வாகிகள் முன்னிலையில், 13.09.2014 சனிக்கிழமையன்று 16.30 மணியளவில், தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு சமுதாய நலக் கூடத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், கட்சிக்கு அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்தல், மாவட்டம் முழுக்க அதிகளவில் கிளைகளை அமைத்தல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
கூட்ட ஏற்பாடுகளை, கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் ஒருங்கிணைப்பில், குழுவினர் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |