எதிர்வரும் ஹஜ் பெருநாளையொட்டி, ஹாங்காங் பேரவை, ஷிஃபா, கே.எம்.டி. மருத்துவமனை, ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் ஆகியவற்றுடன் இணைந்து, புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை நடத்திட, கத்தர் காயல் நல மன்றத்தின் செயற்குழுவில் தீர்மானித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 69ஆவது செயற்குழுக் கூட்டம், கத்தர் காயல் நண்பர்கள் இல்லத்தில் நடைபெற்றது. ஹாஃபிழ் ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிங்கப்பூரிலிருந்து கத்தருக்கு பணியிட மாற்றலாகி வந்திருக்கும் - சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் முன்னாள் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை மன்றத்தின் புதிய உறுப்பினராக தன்னை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, மன்றத்தின் சார்பில் இதுநாள் வரை செய்யப்பட்டுள்ள நகர்நலச் சேவைகள் குறித்து அனைவருக்கும் விளக்கப்பட்டது.
நிறைவில், இன்ஷாஅல்லாஹ் - எதிர்வரும் ஹஜ் பெருநாளையொட்டி, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன், கே.எம்.டி.மருத்துவமனை, திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் ஆகியவற்றின் உறுதுணையுடன் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை, கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்திட தீர்மானிக்கப்பட்டு, கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை துஆ இறைஞ்ச, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(உள்ளூர் பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
படங்கள்:
முஹம்மத் முஹ்யித்தீன்
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |