காயல்பட்டினம் தைக்கா தெருவிலுள்ள மஹான் ஸாஹிப் அப்பா தைக்காவில் அடங்கியிருக்கும் - அன்னாரின் தந்தை மஹான் உமர் வலிய்யுல்லாஹ் அவர்களின் 218ஆம் ஆண்டு கந்தூரி விழா 09.09.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துல்கஃதா மாதம் பிறை 01 அன்று கொடியேற்றப்பட்டது. பிறை 01 முதல் 13 வரை தினமும் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது.
பிறை 12, காலை 09.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், பிறை 13 (09.09.2014) அஸ்ர் தொழுகைக்குப் பின்பும் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திப் மஜ்லிஸும், இஷா தொழுகைக்குப் பின் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ - மஹான் அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ‘அல்லஃபல் அலிஃப்’ எனும் கவிதைக் காவியத்தை ஓதினார்.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ என்.ஏ.ஜி.முஹம்மத் இஸ்மாஈல் ஃபைஜீ - மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களை உள்ளடக்கி சன்மார்க்க சொற்பொழிவாற்றினார்.
இந்நிகழ்வில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கந்தூரியை முன்னிட்டு முன்னதாக ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட குழந்தைகள் ஏற்றப்பட்ட யானை, பல்லக்குகள் அடங்கிய இந்த ஊர்வலம் தஃப்ஸ் முழங்க, நகரின் முக்கிய தெருக்களின் வழியாக தைக்கா வளாகத்திற்குள் சென்றது. ஊர்வல ஏற்பாடுகளை காயல்பட்டணம் முஹ்யித்தீன் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
தகவல் & படம்:
ஹாஃபிழ் A.A.C.ஹாஃபிழ் அமீர்
ஹிஜ்ரீ 1432இல் நடைபெற்ற - மஹான் உமர் வலிய்யுல்லாஹ் கந்தூரி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |