காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற
வெற்றிடங்களுக்கும் தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான செப்டம்பர் 4 வரை, 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் -
இவர்களில் கோமான் ஜமாஅத் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு மாற்று வேட்பாளர்களான எஸ்.ஐ.மொகுதூம் அப்துல் காதர், எஸ்.ஐ. கஸ்ஸாலி மரைக்கார் ஆகியோரும், அ.தி.மு.க. வேட்பாளர் ம.அமலக்கனிக்கு மாற்று வேட்பாளரான எம்.செந்தமிழ் செல்வனும் -
மனுக்களை வாபஸ் வாங்க இறுதி நாளான நேற்று (செப்டம்பர் 8) - தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
மனுக்களை வாபஸ் பெற்ற வேட்பாளர்கள் விபரம் அடங்கிய படிவம் 8
அதனை தொடர்ந்து - தேர்தலை சந்திக்கும் இரு வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் அடங்கிய தகவல் படிவம்-9இல் வெளியாகியுள்ளது.
அதன்படி -
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ம.அமலக்கனி - இரட்டை இலை சின்னத்திலும்,
கோமான் ஜமாஅத் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள சுயேட்சை வேட்பாளர் எஸ்.ஐ.அஸ்ரப் அரிக்கேன் விளக்கு சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.
2. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[09 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37132
இந்த தேர்தல் ஒரு சவால்.
இந்த தேர்தலில் ஜெயிப்பவர்கள் யார் தெரியுமா?
நிறைய சவால்களை, நம்பிக்கையோடு எதிர்கொண்டு போராடுகிறவர்கள் இந்த தேர்தலில் வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெறுவார்கள்.
கடந்த 2014 ல் பாராளுமன்ற தேர்தல் திமுக கூட்டணிக்கு முஸ்லிம் லீக், பிற கட்சிகள், ஆதரித்தது போல மக்கள் சூழ்ந்து களம் இறங்கி இருக்கிறார்கள்.
இந்த தேர்தல் வெற்றி நிர்ணயம் கோமான் வாழ் பகுதிமக்களிடம் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த தேர்தல் முடிவு கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் போலவே அமையும்.
அமைதி, வளம், வளர்ச்சி என்ற மந்திரம் கழக தொண்டர்களிடம் இந்த தேர்தலில் எடுத்து சொல்லி கடைபிடிக்கப்படும்.
3. இங்கே போட்டியும் இல்லை கீட்டியும் இல்லை!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[10 September 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37137
இந்த தேர்தல் ஒரு சாதாரணதேர்தல் இதை பெருசாபூதாகரமாக்கி பிரபலபடுத்த வேண்டாம்.இங்கே போட்டியும் இல்லை கீட்டியும் இல்லை..கோமான்கள் கைகோர்த்துக்கொண்டு களத்தின்
வேட்பாளரை வெற்றிக்கட்டிலில் அமரவைத்து அழகு பார்க்கப் போகிறார்கள்.இது அசால்ட்டாக நடைபெற்றுமுடியும்!.
மோதியவர்கள் முட்டுப்பட்டபின் தெரியும்,ஆகா, ஒருங்கிணைந்த சக்தி சுவரில் அல்லவா மோதி இருக்கிறோம் என்று. மூலையில் உட்க்கார்ந்து ஓசையின்றி ஒப்பாரி வைத்து ஒருவரை ஒருவர் பேய்யரைந்தவர் போல் பார்த்துக்கொண்டு மேலாணை அடைப்புக்குறி அபாயச்செய்தி வந்துவிடுமோ என்று வெடவெடத்துப்போய் நிற்கும் காட்சியை காணத்தான் போகிறம் இன்ஷா அல்லாஹ்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
4. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[10 September 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37152
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த உள்ளைட்சி இடைத்தேர்தல் தமிழ் மாநிலத்தில் பல நாடகங்களையும் , மக்களை மடையராகும் செயல்களையும் செய்து கொண்டு இருக்கிறது. ஆனால், காயல்படினத்தை பொறுத்தவரை இது வரை அது போன்ற ஜனநாயக கூத்து மற்ற இடத்தை போல நடக்கவில்லை ஆனால் தேர்தலின் போது அணைத்து மக்களும் கவனமாக இருக்க வேண்டும் .
ஜனநாயக முறைப்படி இந்த தேர்தல் நல்ல முறைப்படி எந்த அசம்பாவிதம் இன்றி நடந்தால் அதுவே ஜனநாயகத்துக்கு கிடைக்கும் வெற்றிதான் அதைதாண்டி இந்த தேர்தலில் மதம் , கட்சி , பகுதி என்று எல்லாம் பார்க்க தேவை இல்லை அந்த வாடில் களத்தில் உள்ள இந்த இருவரில் யார் வெற்றி பெற்றால் நல்லது என்பதை அந்த வார்டின் வாகாளர்கள்தான் முடிவு எடுக்கணும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross