காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் மகன் ஹாஃபிழ் கே.ஏ.முஹம்மத் அபூபக்கர், இம்மாதம் 06ஆம் நாள் சனிக்கிழமையன்று காலமானார்.
இவர், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். இம்மாணவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எல்.கே.மேனிலைப்பள்ளி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமது பள்ளியில் 10ஆம் வகுப்பு ஆங்கில வழியில் பயின்று வந்த மாணவர், காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த காழி அலாவுத்தீன் என்பவரின் மகனான கே.ஏ.முஹம்மத் அபூபக்கர், இம்மாதம் 06ஆம் நாளன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்துவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம்வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவப் பிழைகளை மன்னித்து, மேலான சுவனத்தை வழங்கிட - எம் பள்ளியின் நிர்வாகிகள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களாகிய நாங்கள் யாவரும் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |