Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:55:47 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14464
#KOTW14464
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, செப்டம்பர் 7, 2014
தமுமுக நடத்திய மருத்துவ பரிசோதனை இலவச முகாமில் 500 பேர் பயன்பெற்றனர்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3317 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}





தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) காயல்பட்டினம் நகர கிளை சார்பில், திருநெல்வேலி மேக்ஸ் ஜோன்ஸ் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் - இன்று (செப்டம்பர் மாதம் 07ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை) 08.30 மணி முதல் 13.00 மணி வரை, மருத்துவ பரிசோதனை இலவச முகாம் நடத்தப்பட்டது.

முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு தமுமுக தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆஸாத் தலைமை தாங்க, அதன் மருத்துவ அணி மாநில செயலாளர் கிதுரு முஹம்மத், தமுமுக தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் எம்.ஹஸன் வரவேற்றுப் பேசினார். தமுமுக நகர தலைவர் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் நன்றி கூறினார். சிறப்பு விருந்தினர் தம்மாம் இஸ்மாஈல் மருத்துவ பரிசோதனை இலவச முகாமைத் துவக்கி வைத்தார்.

இம்முகாமில், திருநெல்வேலி அருணா கார்டியோ கேர் சார்பில் டாக்டர் இ.அருணாச்சலம், நாகர்கோவில் திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் எம்.மணிகண்டன், அதன் மருத்துவர்களான டாக்டர் ரமேஷ், டாக்டர் சங்கர், சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில் டாக்டர் மங்கல செல்வி, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், மருத்துவர்களான டாக்டர் பிரதிக், டாக்டர் ஈஷா இங்லே உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.























எலும்பு - மூட்டு பிரிவில் 128 பேரும், இதயம் பிரிவில் 105 பேரும், கண் பிரிவில் 190 பேரும், புற்றுநோய் பரிசோதனை பிரிவில் 77 பேரும் என மொத்தம் 500 பேர் இம்முகாமில் பயன்பெற்றனர். புற்றுநோய் பரிசோதனைப் பிரிவில் சிலருக்கு ஆரம்ப நிலையில் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

தமுமுக மருத்துவ அணி மாவட்டச் செயலாளர் ஜோதி, அதன் நகர செயலாளர் முஜீபுர்ரஹ்மான், மேக்ஸ் ஜோன் சாரிடபிள் ட்ரஸ்ட் சார்பில் அதன் நிறுவனர் ஜெ.டோமிக் ஆண்டனி ஆகியோர் ஒருங்கிணைப்பில், ஐதுரூஸ், எஸ்.டீ.செய்யித் இப்றாஹீம், காதர், ஷாஹுல் ஹமீத், ஜிஃப்ரீ, அபூகனீ, மவ்ஜூத், தமுமுக காயல்பட்டினம் 15ஆவது வார்டு கிளைக் கழக அங்கத்தினரான முஹம்மத் ஸபீர் அலீ, என்.ஷேக் முகைதீன், எஸ்.முஹம்மத் ஷேக் முகைதீன், ஐ.முஹம்மத் ஃபாஸில், எம்.ஷேக் முஹம்மத் புகாரீ, ஏ.முஹம்மத் குலாம் ராஃபி, எம்.முஹம்மத் ஸித்தீக், எச்.அப்துல் பாஸித், எம்.அஸ்ஹருத்தீன், பி.ரியாஸ், எம்.அக்பர்ஷா உள்ளிட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தகவல்:
‘முர்ஷித் ஜெராக்ஸ்’ முஹ்ஸின்
மற்றும்
M.ஹஸன்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [07 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37089

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் ....இவ்வளவு நம் மக்கள் பயன் பெற்று உள்ளார்களா .....அல்ஹம்துல்லிலாஹ் ...... நமது ஊர் மக்களுக்கு நல்லதோர் மிகவும் பயன் உள்ள ஒரு பொதுநல தொண்டு தான் இது .....

அல்லாஹ் இந்த நல்ல செயலை சிறப்புடன் வழி நடத்தி சென்ற இந்த பொது நல அமைப்புக்கு எங்களின் நன்றியும் ...துவா''வாவும் உண்டு ......

அல்லாஹ் அவனின் நல் வழிபாட்டில் நம்மையும் ...இந்த அமைப்பினர்களையும் என்றென்றும் நலமாக்கி அருள்வானாகவும் ஆமீன்.....

நம் ஊர் அனைத்து மக்கள் மீது அக்கறை கொண்ட தங்களின் இந்த நற் பணிகள் ..... தொடரட்டும்...... ( தங்களின் இது போன்ற நம் ஊருக்கான பொது நல்ல தொண்டுகள்.).........வாழ்த்துக்கள் மீண்டும்......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [08 September 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37093

இந்த முகாமில் எழும்பு சிகிச்சை கண்டுஅரிய மக்கள் குறைவு. கண் சிகிச்சைக்கு கூட்டம், புற்று சிகிச்சை பிரிவைகாண 11.30 மணி வரை யாரும் இல்லை. மக்களுக்கு அட்சஉணர்வு, அதோடு வெட்க உணர்வும்கூட. முகாம் அமைப்பில் உள்ளவர்கள் ஒருசிலர் உடல்கூருகளை துணிவுடன் கேட்டுஅறிய மருத்துவரை அணுகியபோது கூட்டம் கூட்டம்மாக புற்றை கண்டு அறிந்தார்கள். முகாமில் நானும் கலந்துகொண்டு புற்று எப்படி உருவாகிறது என்பதை மருத்துவர் மூலம் தெரிந்து கொண்டேன். மது, புகையிலை உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகம் தொத்துமாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved