காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் மகன் ஹாஃபிழ் கே.ஏ.முஹம்மத் அபூபக்கர், இம்மாதம் 06ஆம் நாள் சனிக்கிழமையன்று காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் எம்.செய்யது அஹமது வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்!
இதய ஆறுதலைத் தெரிவிக்கிறோம்!!
எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை, ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுதீன் அவர்களின் மகன் ஹாஃபிழ் கே.ஏ.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் இம்மாதம் 06ஆம் நாளன்று வஃபாத்தாகிவிட்ட செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இறைவனுடைய நாட்டப்படி ஏற்பட்டுவிட்ட இந்த மரணத்திற்காக நாங்கள் ஸபூர் செய்து கொண்டோம்.
யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளை பொறுத்து, உயரிய சுவனபதியில் அவர்களை அமரச் செய்வாயாக, ஆமீன்.
மர்ஹூம் அவர்களைப் பிரிந்து வாடும் எமதமைப்பின் முன்னாள் தலைவர் ஜனாப் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் எமது பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கும் இதயத்தையும், அழகிய பொறுமையையும் அவர்களுக்கு வழங்க இறைவனிடம் மனமுருக பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |