ஆறுமுகனேரியில் காவல்துறைதனிப்பிரிவு காவலரைத் தாக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
குரும்பூர் அருகிலுள்ள புறையூரைச் சேர்ந்தவர் ரகு(36). இவர் ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் தனிப்பிரிவு தலைமைக் காவலராக உள்ளார். இவரை கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு ஆறுமுகனேரி பேயன்விளையைச் சேர்ந்த சிலர் தாக்கினர் என புகார் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இவ் வழக்கில் பேயன்விளையைச் சேர்ந்த பழனிமுருகன் மற்றும் அந்தோனி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை பேயன்விளையைச் சேர்ந்த வேணுகோபால் மகன் கண்ணனை (32) ஆறுமுகனேரி போலீஸார் கைது செய்தனர். அவர் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாள்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகதேவ் மற்றும் ராதாகிருஷ்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross