வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர், DCW தொழிற்சாலைக்கு தொழிற்சாலை பயணமாக (INDUSTRIAL VISIT) சென்றனர். ஆகஸ்ட் 16 அன்று நடந்த இந்நிகழ்வில், கல்லூரியின் பி.பி.ஏ., பி.காம்., எம்.காம். உள்ளிட்ட வணிகவியல் (Commerce) பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் தனித்தனி குழுக்களாக கல்லூரியால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் - கல்லூரியின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியை, துறைத் தலைமை ஆசிரியையர், வகுப்பாசிரியையர் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
தொழிற்சாலைக்குச் சென்ற மாணவியருக்கு, அதன் உற்பத்தி குறித்தும், துவங்கப்படவுள்ள புதிய தொழிற்சாலை குறித்தும் - அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் விளக்கங்கள் வழங்கியுள்ளனர். மேலும், நகரில் இத்தொழிற்சாலை குறித்து நடக்கும் போராட்டம் அவசியமற்றது என்றும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
மேலும், வாவு வாஜீஹா வனிதையர் கல்லூரியின் பி.பி.ஏ., (வணிக நிர்வாகவியல்) துறையின் BUSY BEE ASSOCIATION ஏற்பாட்டில் ஆகஸ்ட் 20 அன்று நடந்த நிகழ்ச்சியில், DCW தொழிற்சாலையின் துணைத் தலைவர்களுள் ஒருவரான சுபாஷ் தண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு, Inter-Personal Communication என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியதாகவும் தெரிகிறது.
இதற்கு முன்னர் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாளன்று, இதே துறையின் நிகழ்ச்சியொன்றில், DCW நிறுவனத்தின் துணை மேலாளர் (பயிற்சி) டாக்டர் ஏ.விஜய் கலந்துகொண்டு, Time Management என்ற தலைப்பில் உரை நிகழ்த்திச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் 2013-14 ஆண்டறிக்கையில் இருந்து...
|