காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற
வெற்றிடங்களுக்கும் தேர்தல் அறிவிப்பு மறு ஆணை, கடந்த ஆகஸ்ட் 28 அன்று வெளியானது.
அதன்படி செப்டம்பர் 4 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், செப்டம்பர் 18 தேர்தல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி தினமாகும். இன்று 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இறுதி நிலவரப்படி இவ்வார்டுக்கு
மொத்தமாக 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் பெயர்கள் வருமாறு:
(1) ம.அமலக்கனி [அ.தி.மு.க.]
(2) எஸ்.ஐ.அஸ்ரஃப் [சுயேட்சை]
(3) எஸ்.ஐ.மொகுதூம் அப்துல் காதர் [சுயேட்சை]
(4) எஸ்.ஐ. கஸ்ஸாலி மரைக்கார் [சுயேட்சை]
(5) எம்.செந்தமிழ் செல்வன் [சுயேட்சை]
இவர்களில் எஸ்.ஐ.மொகுதூம் அப்துல் காதர், எஸ்.ஐ. கஸ்ஸாலி மரைக்கார் ஆகியோர் கோமான் ஜமாஅத் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு மாற்று வேட்பாளர்கள் என்றும், எம்.செந்தமிழ் செல்வன், அ.தி.மு.க. வேட்பாளர் ம.அமலக்கனிக்கு மாற்று வேட்பாளர் என்றும் தெரிகிறது.
அன்றாடும் பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில் நிரப்பப்படும் படிவம் 4 மாதிரி
செப்டம்பர் 4, 2014 (படிவம் 4)
செப்டம்பர் 3, 2014 (படிவம் 4)
செப்டம்பர் 2, 2014 (படிவம் 4)
ஆகஸ்ட் 30, 2014 (படிவம் 4)
ஆகஸ்ட் 28, 2014 (படிவம் 4)
பெறப்பட்ட விண்ணப்பங்கள் - பெறப்பட்ட வரிசையில், செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் சரிபார்க்கப்படும்.
இறுதியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் நிரப்பப்படும் படிவம் 5 மாதிரி
செப்டம்பர் 4, 2014 (படிவம் 5)
தகவல்களில் உதவி:
'தமிழன்' முத்து இஸ்மாயில்
மற்றும்
ஏ.கே.இம்ரான்
[செய்தி திருத்தப்பட்டது @ 7:00 pm / 04.09.2014] |