2013-2014 கல்வியாண்டில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி - காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சேர்ந்த எஸ்.ஏ.சி.முஹம்மத் முல்தஜிம் மகள் அஹ்மத் ஃபாத்திமா உம்மு அய்மன் 1200க்கு 1169 மதிப்பெண்கள் பெற்று காயல்பட்டினம் நகரளவில் முதலிடம் பெற்றார்.
அவரைப் பாராட்டும் வகையில், காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் - ஹாங்காங் (கஸ்வா) அமைப்பின் சார்பில், பணப்பரிசு மற்றும் மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவு கேடயத்தை, மவ்லவீ ஹாஃபிழ் கத்தீபு கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் ஆலிமின் மனைவி ஹாஜ்ஜா எச்.எம்.எஸ்.சதக்கு ஃபாத்திமா மாணவியிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கஸ்வா அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அதன் உள்ளூர் பிரதிநிதி ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் விளக்கிப் பேசினார். ஏராளமான மாணவியரின் பெற்றோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியை நிர்வகிக்கும் வாவு அறக்கட்டளை, பள்ளியின் தலைமையாசிரியை, அலுவலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
பரிசளித்த கஸ்வா அமைப்பிற்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தகவல்:
ஹாஃபிழ் M.I.யூஸுஃப் ஸாஹிப்
உள்ளூர் பிரதிநிதி - கஸ்வா
கஸ்வா அமைப்பு சார்பில், 2011-2012 கல்வியாண்டில் ப்ளஸ் 2 தேர்வில் நகரளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கஸ்வா அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |