காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவையொட்டிய அக்பர்ஷா தெருவில் அமைந்துள்ளது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல்.
நிர்வாகம்:
இப்பள்ளியின் தலைவர் தஸ்தகீர் ஹாஜி காலமானதையடுத்து, புதிய தலைவராக ஹாஜி புகாரீ, துணைத்தலைவராக ‘பழக்கடை’ அப்துர்ரஷீத், செயலாளராக அன்வர் சார், துணைச் செயலாளராக அப்துர்ரஸ்ஸாக் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் - பிலால்:
இமாம் மற்றும் பிலால் பொறுப்பை அம்பலம் ஸாலிஹ் ஏற்று பணியாற்றி வருகின்றார். நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையை புகாரீ என்பவர் வழிநடத்தினார். திருமறை குர்ஆனின் சிறிய அத்தியாயங்கள் இத்தொழுகையில் ஓதப்பட்டன. ரமழான் முழுக்க இஷா 20.30 மணிக்கும், தராவீஹ் 20.45 மணிக்கும் துவங்கின.
இஃப்தார் ஏற்பாடுகள்:
இப்பள்ளியில் நோன்பு துறக்க வருவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால், பள்ளி திறக்கப்பட்டது முதல் பல ஆண்டுகளாக வெளிப்பள்ளிகளிலிருந்தே கஞ்சி எடுத்து வரப்பட்டு இங்கு வினியோகிக்கப்பட்டு வந்தது. நாளடைவில், இப்பள்ளிவாசலைப் பயன்படுத்தும் இப்பகுதி மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஹிஜ்ரீ 1433ஆம் ஆண்டிலிருந்து இப்பள்ளியிலேயே நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் நடப்பாண்டில் சுமார் 30 பேர் வரை தினமும் நோன்பு துறந்தனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், கறி கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
03.07.2014 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியின் வரலாறு அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் ஹிஜ்ரீ 1433இல் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நகர பள்ளிகளில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |