காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வருகிறது ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் அதன் திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா.
இந்நிறுவனத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில், கடந்த 28.07.2014 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மஃரிப் தொழுகையை முன்னாள் மாணவர் ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் ஸர்ஜூன் வழிநடத்தினார்.
பின்னர் நடைபெற்ற அமர்விற்கு மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கிராஅத்துக்குப் பின் - தலைமையுரையைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ வாழ்த்திப் பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தில், மத்ரஸா வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் குறித்தும், முன்னாள் மாணவர் அமைப்பைத் துவக்கி, அதற்கென இணையதளமொன்றைக் கட்டமைப்பது குறித்தும் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆண்டுதோறும் நோன்புப் பெருநாளையொட்டிய ஏதேனும் ஒரு நோன்பு நாளில் முன்னாள் மாணவர்கள் சார்பில் இதுபோன்று இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி நடத்தி, முன்னாள் மாணவர்களை ஒரே இடத்தில் ஒன்றுகூடச் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
முன்னாள் மாணவர் என்.டீ.ஷெய்க் மொகுதூம் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், மத்ரஸாவின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என சுமார் 100 பேர் வரை கலந்துகொண்டனர்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், முன்னாள் மாணவர் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் ஒருங்கிணைப்பில், குழுவினர் செய்திருந்தனர்.
ஹாமிதிய்யாவில் கடந்தாண்டு நடைபெற்ற முன்னாள் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாமிதிய்யா முன்னாள் மாணவர்கள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |