காயல்பட்டினம் காட்டு தைக்கா தெரு - தைக்கா தெரு - சிவன்கோயில் தெரு - பாக்கர் காலனி - தருவை ஆகிய தெருக்களுக்கு நடுவில் அமைந்துள்ளது, மஸ்ஜித் அல்அரூஸ் எனும் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளிவாசல்.
இடநெருக்கடி காரணமாக, இப்பள்ளியின் பழைய கட்டிடம் அகற்றப்பட்டு, புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, 20.07.2012 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகையுடன் புதிய கட்டிடத்தில் வணக்க வழிபாடுகளும் துவங்கின.
நிர்வாகம்:
இப்பள்ளியின் தலைவராக ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் சுல்தான், செயலாளராக ஹாஜி எஸ்.எம்.பி.மூஸா நெய்னா ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் - பிலால்:
இப்பள்ளியின் இமாமாக வடகரையைச் சேர்ந்த முஹம்மத் வலிய்யுல்லாஹ் என்பவரும், பிலாலாக - இஸ்லாம் மார்க்கத்தை தானாக முன்வந்து தன் வாழ்வியலாக்கிக் கொண்ட – சேலம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த அப்துர்ரஹீம் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை, காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அலீ (48) மகன் ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் நூஹ், சித்தன் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரிணைந்து வழிநடத்தினர். தராவீஹ் தொழுகையில் திருமுறை குர்ஆன் முழுதும் ஓதி முடிக்கப்பட்டது.
ரமழான் மாதம் முழுவதும் இஷா தொழுகை 20.30 மணிக்கும், தராவீஹ் தொழுகை 20.50 மணிக்கும் துவங்கின.
இஃப்தார் ஏற்பாடுகள்:
இப்பள்ளியில், வழமை போல இவ்வாண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, ஜமாஅத்திற்குட்பட்ட குடும்பத்தினருக்கு ஊற்றுக்கஞ்சி வினியோகிக்கப்பட்டதுடன், நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
நாள்தோறும் வினியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை, இப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர். இஃப்தார் நிகழ்ச்சியில் 40 பேர் முதல் 80 பேர் வரை கலந்துகொண்டனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், கஞ்சி, வடை, தண்ணீர் ஆகியன பரிமாறப்பட்டன.
வெண்கஞ்சி அருகிப்போன இக்காலகட்டத்திலும், இப்பள்ளியில் ஆண்டுதோறும் வெண்கஞ்சியே பெரும்பாலும் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு கஞ்சி கமிட்டியினராக ஏ.ஷாஹுல் ஹமீத், ஜெ.எம்.ஏ.காதர், எஸ்.ஐ.புகாரீ, எஸ்.ஏ.முஹம்மத் சுல்தான் (தலைவர்), கே.எம்.ஸாலிஹ் ஆகியோர் சேவையாற்றினர்.
03.07.2014 அன்று நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படக்காட்சிகள் வருமாறு:-
தகவல்:
S.H.முஹம்மத் உமர் (எ) ‘ரிஃப்அத் உமர்
இப்பள்ளியின் ஹிஜ்ரீ 1433ஆம் ஆண்டில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அரூஸிய்யா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நகர பள்ளிகளில் நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்ற தகவல்களடங்கிய முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |