இஸ்லாம் மார்க்கத்தைத் தாமாக முன்வந்து தம் வாழ்வியலாக்கிக் கொள்ளும் ஆண் - பெண்களுக்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பல்லாண்டுகளாக செய்து வருகிறது - காயல்பட்டினம் அலியார் தெருவில் அலுவலகம் மற்றும் தங்குமிடத்தையும், குட்டியாபள்ளியில் வகுப்பறைகளையும் கொண்டு இயங்கி வரும் சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர்.
இந்நிறுவனத்தின் கல்விப்பிரிவான புனித குர்ஆன் கல்லூரியில் பயிலும் - புதிதாக இஸ்லாம் மார்க்கத்தைத் தாமாக முன்வந்து தம் வாழ்வியலாக்கிக் கொண்ட மாணவ-மாணவியருக்கு, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க - பல்வேறு உணவு வகைகளுடன் ஸஹர் உணவு ஏற்பாடும், நோன்பு துறக்க - இஃப்தார் உணவு ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, தஃவா சென்டரின் கல்விப் பிரிவு செயல்பட்டு வரும் காயல்பட்டினம் குட்டியா பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
நோன்பு துறப்பு நேரத்தின்போது, 3 பேர் இணைந்தமரும் வகையில் ஒரே தட்டில் பழ வகைகள் மற்றும் குளிர்பானம் பரிமாறப்படுகிறது. மஃரிப் தொழுகை நிறைவுற்ற பின்னர், அனைவருக்கும் நோன்புக் கஞ்சி பரிமாறப்படுகிறது.
நோன்பு துறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ - பிரார்த்தனைகளுக்கு அதிக மதிப்புள்ளது என்று பயிற்றுவிக்கப்பட்டுள்ளதையடுத்து, இங்கு பயிலும் மாணவர்கள் அந்நேரத்தில் அமைதியாக பிரார்த்தனை செய்வது வழமை.
நோன்பு துறந்த பின்னர், அவர்கள் உணவுண்டதற்கும் - குடித்ததற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இறைவனுக்கு நன்றி செலுத்துவதோடு, இந்த உணவுகளுக்கான செலவினங்களுக்கு உதவியோரின் ஈருலக வாழ்வு சிறக்கவும் இவர்கள் பிரார்த்தனை செய்வர்.
14.07.2014 அன்று நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
தஃவா - அழைப்புப் பணியில் ஆர்வங்கொண்ட சில உள்ளூர் மக்களும் இந்த இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவர்களுக்கு பணிவிடை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தஃவா சென்டரில் ஹிஜ்ரீ 1433இல் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நகர பள்ளிகளில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |