காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில் “சட்ட பயிலரங்க” விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
அன்பிற்குரிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில் வல்லோன் அல்லாஹ்வின் கிருபையால் சென்ற 29.08.2014 (வெள்ளிக்கிழமை)
அன்று இரவு 07:30 – 09:00 மணிவரை நமது KCGC அலுவலகத்தில் “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நமது உரிமைகள்” எனற தலைப்பில் “சட்ட
பயிலரங்க" விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
முன்னதாக புனித இறைமறை வசனங்கள் ஓதி நிகழ்ச்சி துவக்கப்பட்டது. அதன்பின் இந்த பயிலரங்கை, சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் L.S.M
ஹசன் ஃபைசல் அவர்கள் தொடக்கி வழி நடத்தினார். அவர் தனது. உரையின் ஆரம்பமாக இந்திய அரசமைப்பு உருவான வரலாறு, இந்திய சுதந்திர
சட்டம் உருவாக்கப்பட்ட விதம் ஆகியவற்றை அனைவரும் புரிந்துக்கொள்ளும்படி எளிமையாக எடுத்துரைத்தார்.
பின்னர், நமது இந்திய அரசமைப்பில் என்னென்ன சட்டங்கள் உள்ளன, அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துவது, நமது எல்லைக்குட்பட்ட சட்டங்கள்
எவை?, அதனை நாம் எவ்வாறு கையாள்வது?, சட்டத்தில் நமது உரிமைகள் என்ன? அதனை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்? என்பதைப்
பற்றி சுருக்கமாகவும், தெளிவாகவும் சுட்டிக்காட்டினார்.
நமது அரசமைப்பின் அடிப்படை உரிமைகளை ஒவ்வொரு நபரும் கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்றார். உலகிலேயே இந்தியாவில்
மட்டும் தான் அடிப்படை உரிமைகள் என்று சில உரிமைகள் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
அடிப்படை உரிமைகள் என்பவை -
1. சமத்துவ உரிமை
2. சுதந்திரத்திற்கான உரிமை
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை
5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் ஆகியவையாகும்.
இவையல்லாமல் மேற்கூறிய இந்த ஐந்து உரிமைகளில் ஏதேனும் ஒரு உரிமை மறுக்கப்படும்போது சம்பந்த பட்ட நபர் இவ்வுரிமைகளைக் காத்துக்
கொள்ள நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமென ஆறாவது உரிமையாக அடிப்படை உரிமையில் நமக்கு வழங்கப்பட்டுள்ளதாக
அடிப்படை உரிமைகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், வந்திருந்த பலரும், நடத்திய பயிலரங்கம் தொடர்பாகவும், தங்களுக்குத் தெரிந்த சில குறிப்பிட்ட சட்டங்கள் குறித்தும், ரிட்
மனு, காவல்துறை விசாரனைகள் பற்றியும் பல கேள்விகளைக் கேட்டு, அதற்கான விளக்கங்களைப் பெற்றனர். மேலும் இது போன்ற விழிப்புணர்வு
முகாம்கள் மக்களுக்கு மிகவும் பயனளிக்ககூடிய ஒன்றாகும். எனவே சட்ட பயிலரங்க முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டுமென நிகழ்ச்சியில்
பங்கேற்ற அனைத்து சாராரும் வேண்டுகோள் விடுத்தனர். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியோடும், உங்களைப் போன்றோர்களின்
ஒத்துழைப்போடும் இன்ஷாஅல்லாஹ் அடுத்தடுத்து நிகழ்ச்சியில் நடத்துவோம் என உறுதியளிக்கப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற
அனைவருக்கும் KCGC-ன் காலாண்டு இதழான “KCGC BULLETIN” இதழ்கள் வழங்கப்பட்டன.
KCGC நடத்திய இந்த “சட்ட பயிலரங்க” விழிப்புணர்வு முகாமில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இறுதியாக, கூட்டத்தில் பங்குக்கொண்ட அனைவருக்கும் KCGC-ன் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து துஆ
கஃப்ஃபாராவுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!
வல்ல ரஹ்மான் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம்காரியங்களை வெற்றியாக்கி ஈருலகிலும் நம்யாவரையும் மேன்மைப்படுத்துவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
செயலாளர், KCGC.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|