ஆத்தூர் - முக்காணி இடையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.
ரூ.15 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட இந்த உயர்நிலை மேம்பாலத்தை முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்ஸிங் மூலம்
வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
இதையடுத்து ஆத்தூரில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மாவட்ட ஊராட்சித் தலைவர் மணத்தி ரவிக்குமார்,
ஆத்தூர் பேரூராட்சித் தலைவர் எம்.பி.முருகானந்தம், துணைத் தலைவர் ஆண்டியப்பன் என்ற கண்ணன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.
புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியதை மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் நேரில் பார்வையிட்டார்.
தகவல்: தினமணி
புகைப்படங்கள்: செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை
மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகம்
2. Re:... posted byV D SADAK THAMBY (HONG KONG)[31 August 2014] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 36928
இந்த முக்காணி பழைய பாலம் வருவதற்கு முன்பாக நம் ஊரிலிருந்து தூத்துக்குடி செல்லும் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் வழியாகத்தான் போகவேண்டியதிருந்ததாம் . நீண்ட நேரம் ஆகும் என்பார்கள். பெரியவர்கள் சொல்ல கேள்விப்படிருக்கிறேன். இப்போது மற்றுமோர் புதிய பாலம்.
எனினும் காயல்பட்டணம் - கொம்புத்துரை- பழையகாயல் வழியாக சாலை அமைத்தால் தூரம் மிகவும் குறைந்து பயண நேரமும் மிகக்குறையும் என்கிறார்கள். எந்த அரசு இதை செய்கிறது என்றுபார்ப்போம்.
அதுசரி.கூகிள் மேப்பில் உள்ள படத்தின்படி பாலத்தின் வழியே ஓடும் தண்ணீர் மிகவும் கருப்பாக தெரிகிறதே.இந்த தண்ணீரைத்தான் நாம் தினமும் குடிக்கிறோமா ?
வரவேற்கப்படப் வேண்டிய செயலாகும் இது. சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அத்துடன் இன்னொரு செயலையும் கவனத்தில் கொண்டு செய்தால் இதைவிட அதிக வாழ்த்துக்கும் நன்றிக்கும் உரித்தாகுவார்கள் .. அதாவது தாமிரவருனியின் தண்ணீர் ஆத்தூர் வழியாக இறுதியில் கடலில்தான் கலந்து விடுகின்றது. இதனை தடுத்து தேக்கிடும் வகையில் ஒரு அணைக்கட்டை ஏற்படுத்தினால் - இப்பகுதியில் குடிநீர் பஞ்சத்தை போக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாமே
.. அதற்கான அதிகார வர்க்கம் இதுபற்றி சிந்தித்தால் இன்னும் மக்களின் நெஞ்சப் பாசத்திற்கு உரித்தாகுவார்கள். - என்டி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross