தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஆறுமுகநேரி கிளை சார்பில், சேமிப்புக் கணக்குகள் விழிப்புணர்வு முகாம், காயல்பட்டினத்திலுள்ள அதன் ஏ.டி.எம். மையம் முன்பு நடத்தப்பட்டது.
சேமிப்புக் கணக்குகள் பற்றிய விபரங்களையும், அதன் பயன்களையும், வங்கியின் ஆறுமுகநேரி கிளை மேலாளர் ஆர்.ரமேஷ் பென்சிலால் - காயல்பட்டினம் பொதுமக்களுக்கு விளக்கினார்.
அவ்விடத்திலேயே நூற்றுக்கணக்கான சேமிப்புக் கணக்குகள் புதிதாகத் துவக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், வங்கி அலுவலர்களான மதன் ராஜரத்தினம், நாக கிருஷ்ணன் ஆகியோர் துணைப்பணியாற்றினர். காயல்பட்டினம் நகரின் பொதுமக்கள் பரவலாக இம்முகாமில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |