ஐ.ஐ.எம். நடத்தும் இஸ்லாமிக் பைத்துல்மால் சார்பில், 14 ஆண்டுகளில் 75 லட்சம் ரூபாய் - காயல்பட்டினத்திலுள்ள நலிந்தோருக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஐ.ஐ.எம். இஸ்லாமிக் பைத்துல்மால் பொருளாளர் எஸ்.எம்.அமானுல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இஸ்லாமிக் பைத்துல்மால், கடந்த 1989ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. காயல்பட்டினத்திலுள்ள - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களுக்கு - எவ்வித கொள்கை வேறுபாடுகளும் பாராமல் - கல்வி, மருத்துவம், சிறுதொழில், குடிசை கட்டுமானம் உள்ளிட்டவற்றுக்காக இப்பிரிவிலிருந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பைத்துல்மால் மூலம், கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான 14 ஆண்டுகளில், ரூபாய் 75 லட்சத்து 1 ஆயிரத்து 653 ரூபாய் - நலிந்தோருக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. துறை வாரியாக கொடுக்கப்பட்ட உதவித்தொகை விபரங்கள்:
மருத்துவம் - 49,11,245.00
கல்வி - 15,47,822
குடிசை (அஸ்பெஸ்டாஸ், சிமெண்ட்) - 10,79, 268
சிறுதொழில் - 2,88,518
நிவாரணம் மற்றும் கத்னா - 72,000
மார்க்கக் கல்வி - 3,02,800
வழங்கப்பட்ட மொத்த உதவித்தொகை - ரூ.75,01,653
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
குளம் K.S.முஹம்மத் யூனுஸ்
ஐ.ஐ.எம். இஸ்லாமிக் பைத்துல்மால் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |