அண்மையில் காலமான காயல்பட்டினம் நகரப் பிரமுகர்களது குடும்பத்தினரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இம்மாதம் 22ஆம் நாளன்று காலையில் திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்திருந்தார்.
காயல்பட்டினத்தில் அண்மையில் காலமான நகரப் பிரமுகர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக அன்று 17.30 மணியளவில் திருநெல்வேலியிலிருந்து காயல்பட்டினம் வருகை தந்தார்.
துவக்கமாக, முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸனின் தாய்மாமாவும், திருச்சி ஜனதா டைமண்ட் நிறுவனத்தின் அதிபருமான எம்.டீ.எஸ்.முஹம்மத் ஷாஃபிஈ என்ற ஷாஃபி ஹாஜியார், இம்மாதம் 18ஆம் நாளன்று காலமானதையொட்டி, அவரது மைத்துனர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் மற்றும் குடும்பத்தினரை, காயல்பட்டினம் குறுக்கத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரின் மாமனார் – காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த டீ.ஓ.மஹ்மூத் 15.07.2014 அன்று காலமானதையொட்டி, அன்னாரது மகன் டீ.ஓ.எம்.தைக்கா உமர் உள்ளிட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், காயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.செய்யித் அஹ்மத் இம்மாதம் 05ஆம் நாளன்று காலமானதையொட்டி, அவரது மக்களான ஹாஃபிழ் எஸ்.ஏ.ஷெய்க் ஹல்ஜீ, எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன் ஆகியோரை, தீவுத்தெருவிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நிறைவாக, முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீயின் மாமனார் எம்.எம்.ஜெய்னுத்தீன் மரைக்கார் 31.07.2014 அன்று காலமானதையொட்டி, அவரது மகனும் - காயல்பட்டினம் இரட்டை குளத்துப் பள்ளி இமாம் ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் உள்ளிட்ட குடும்பத்தினரை அவர்களது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அனைத்து இடங்களிலும், மறைந்த மர்ஹூம்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது. முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் பிரார்த்தனை செய்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் முஹ்யித்தீன், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், இளைஞரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர துணைச் செயலாளர்களான பெத்தப்பா சுல்தான், எம்.எச்.அப்துல் வாஹித், நகர நிர்வாகிகளான எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, ஏ.கே.மஹ்மூத் சுலைமான், எம்.எல்.ஷேக்னா லெப்பை, பீ.எம்.எஸ்.அமானுல்லாஹ், எம்.இசட்.சித்தீக் உள்ளிட்ட கட்சியினர் இந்நிகழ்வுகளின்போது உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |