காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பாக, ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை சட்ட பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
அன்பிற்குரிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பாக இன்ஷாஅல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (29.08.2014) அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நமது உரிமைகள் எனற தலைப்பில் சட்ட பயிலரங்க விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம். அது தொடர்பான சுற்றரிக்கை.
உலகில் ஒருவர் எந்த நாட்டவராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த இனத்தவராக இருந்தாலும் அவருக்கு, அவருடைய நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளையும் வழங்கும் ஒரே நாடு நமது இந்தியா தான்.
நமது நாட்டில் ஒவ்வொரு மதத்திற்கும் எனத் தனித்தனியாகச் சட்டம் இருந்தாலும், அதனை பயன்படுத்திக் கொள்ள பலர் முன்வருவதில்லை. காரணம் அது பற்றிய விழிப்புணர்வு இன்மையே.
நம் நாட்டில் ஒரு சாதாரண குடிமகனால் அறிந்து கொள்ள முடியாத பல விஷயங்களுள் சட்டமும் ஒன்று. நிறைய படித்தவர்களும், வக்கீல்களும் மட்டுமே சட்ட வழிமுறைகளை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். நாம் எங்கு போவது? எப்படி கற்பது? எது சரி? எது தவறு? சட்டங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிலைகளுக்கும் சட்டபிரிவுகள் ஏராளம். இவற்றுள் பெரும்பான்மையான ஷரத்துகள் நாம் அறியாதவை. ஏனோ இவற்றை கற்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நாம் முயல்வதில்லை. ஒருவேளை அந்தப் புத்தகங்களும் அதில் சொல்லப்ட்டிருக்கும் மொழிநடையும் கடினமாகத் தோன்றுவது காரணமாக இருக்கும்.
நமது அரசமைப்பின் அடிப்படை சட்டத்தை ஒவ்வொரு நபரும் அறிய வேண்டும். அடிப்படை உரிமை என்றால் நமக்குத் தேவையானதை யாரிடமும் அனுமதி கேட்காமல் நாமே எடுத்துக் கொள்வதாகும்.
“சட்டம் தெரியாது என்பதற்காக எந்த ஒரு குற்றச்சாட்டிலிருந்தும் எவர் ஒருவரும் தப்பிக்க முடியாது!”. எனவே நம்மவர்கள் அனைவரும் ஓரளவாவது சட்டம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நற்சிந்தனையில் இந்த சட்ட பயிலரங்க விழிப்புணர்வு முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். அனைவரும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பயனுள்ள முகாமில் கலந்துக்கொள்ள, வரும் 29-ஆகஸ்ட்-2014, மதியம் 2:00 மணிக்குள் முன்பதிவு செய்துக் கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். அனுமதி இலவசம். முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மொத்தம் 50 இருக்கைகளுக்கு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.
நிகழ்ச்சி நிரல்
சட்டப் பயிற்சியாளர்:
வழக்கறிஞர். ஹசன் பைசல் அவர்கள்
(வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம்)
நாள்: 29.08.2104 (வெள்ளிக்கிழமை)
காலம்: மாலை 6:30 – 08:00 வரை
இடம்: காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC)
எண்:1 உசேன் மரைக்காயர் சந்து, மூர் தெரு, மண்ணடி, சென்னை – 1.
மேலும் தொடர்புக்கு
ஹைதர் உசேன் – (நிர்வாக அலுவலர்) : +91 87544 09169.
இப்படிக்கு,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
செயலாளர், KCGC.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |