Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:26:30 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14377
#KOTW14377
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014
30 ஆண்டுகளுக்கு முன்னர்: வேறு ஊர், இதே நிறுவனம், இதே பிரச்சனை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5073 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் 1958ம் ஆண்டு துவக்கப்பட்ட DCW நிறுவனம், இங்கு 56 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ளது.

1925 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் தாரங்கதாரா பகுதியில் துவக்கப்பட்டு, அங்கு 59 ஆண்டுகள் நிறைவு செய்த காலகட்டமான 1984ம் ஆண்டு, DCW நிறுவனத்தின் தாரங்கதாரா பகுதி தொழிற்சாலையின் செயல்பாடுகளால் - அப்பகுதியில் எவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது, அதனால் மக்கள் அடைந்த இன்னல்கள் குறித்து - INDIA TODAY பத்திரிக்கை, 1984ம் ஆண்டு மே 15 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அதன் தமிழாக்கமும், அதனை தொடர்ந்து ஆங்கில மூலமும் கீழே:

இந்தியா டுடே (மே 15, 1984)

குஜராத்: DCW தொழிற்சாலையின் கழிவுகள் ஃபால்கு ஆற்றினை குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பிரயோஜனமற்றதாக ஆக்கிவிட்டது

17 ஆண்டுகளுக்கு முன்னர் - தனது பண்ணையில் ஒரு ஏக்கரில் 2228 கிலோ அறுவடை கண்ட விவசாயி பகதூர்சின்ஹ் ஜலாவினை கண்டு சுரேந்திரநகர் மாவட்டமே பொறாமை கொண்டது. ஆனால் - இன்று அதே நிலத்தில், ஒரு ஏக்கரில் 200 கிலோ அறுவடை கண்டால் தான் அதிர்ஷ்டசாலி என்கிறார் அவர்.

தனது உற்பத்தி அளவு குறைவதை கண்ட ஒரே விவசாயி - பகதூர்சின்ஹ் மட்டும் அல்ல. ஃபால்கு ஆற்றின் கரையோரம் உள்ள நான்கு கிராமங்களில் (மல்வான், வாவ்டி, இசட்ரா, தலா) உள்ள 1200 விவசாயிகள் அனைவரும் இதே குறையினை தான் கூறுகிறார்கள். விவசாயி கணேஷ் படேல் கூறுகிறார்: "ஒரு நாள் - உற்பத்தி மேலும் குறையும் போது, உணவு பற்றாக்குறை அதிகரிக்கும்போது, இங்குள்ள நாலு கிராமத்து விவசாயிகள் தீவிர ஆர்ப்பாட்டத்தில் இறங்குவார்கள்".

விவசாயிகள் - தங்கள் அருகில் உள்ள Dhrangadhra Chemical Works (DCW) நிறுவனத்தையே தங்கள் பிரச்சனைகளுக்கு காரணமாக கூறுகிறார்கள். இந்நிறுவனம் ஆற்றினில் செலுத்தும் கழிவுகளால், மண்ணின் உப்பு தன்மை அதிகரித்து, பிரயோஜனமற்றதாக மாறிவிடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆறு மெல்ல வத்தி வருவதாகவும், சோடியம் க்ளோரைட், கேல்சியம் க்ளோரைட் மற்றும் இதர உப்பு கழிவுகள் மெல்ல குடிநீர் மட்டத்தில் சேர்ந்து, அருகில் உள்ள கிணறுகளில் உப்பு அளவினை அதிகரித்து, அவற்றை குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பிரயோஜனமற்றதாக ஆக்கிவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

பகதூர் சின்ஹ் கூறுகிறார்: "இன்றே அவர்கள் மாசு ஏற்படுத்துவதை நிறுத்தினாலும் - இப்பகுதி மண்ணுக்கும், இயல்பு நிலை திரும்ப 7 ஆண்டுகள் ஆகும். பொதுமக்கள் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து வைக்கும் குற்றச்சாட்டுகளை - DCW நிறுவனம் தீவிரமாக மறுக்கிறது. மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்துள்ள வழக்குகளை இந்நிறுவனம் - மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சந்தித்து வருகிறது.

DCW நிறுவனத்தின் செயலாளர் சி.எம்.காந்தி கூறுகிறார்: "மாசு பிரச்சனை ஒன்றும் இங்கு இல்லை. இது எல்லாம் அரசியல். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டோம். ஆனால் அவர்கள் எங்களை 2 கோடி ரூபாய் செலவிட்டு, 25 கிலோமீட்டர் தூரத்திற்கு சாக்கடை குழாய் அமைக்க சொல்கிறார்கள். அது எங்களால் முடியாது".

இந்த விளக்கங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஒவ்வொரு நாளும் இந்நிறுவனம் 1500 க்யூபிக் மீட்டர் (15 லட்சம் லிட்டர்) முதல் 3000 க்யூபிக் மீட்டர் (30 லட்சம் லிட்டர்) அளவிலான கழிவுகளை ஆற்றினில் கலக்கிறது. இதனால் தங்கள் பண்ணைகளும், உடல் நலனும் பாதிக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். மாள்வான் பகுதியில் அரசு மருத்துவ மைய்யத்தை பராமரிக்கும் டாக்டர் டி.கே.தபி - சோடியம், தசையினையும், இருதயத்தையும் பாதிக்கும் என்றும், தளர்ச்சியினை உண்டு பண்ணும் என்றும் தெரிவித்தார். மேலும் - சோடியம் கார்போனேட், சிறு நீராக பையில் போய் தங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆற்றினில் கழிவுகளை கலப்பதை நிறுத்த இந்நிறுவனம் தயாராக இல்லை. அதனால் - ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களின் குறைகள் தீர்க்கப்படும் வரை, வரி ஏதும் கட்டுவதில்லை என முடிவு செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், மேலும் ஒரு படி சென்று, சத்தியாக்ரஹ அமைப்பு ஒன்றினை துவக்கி, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

கடை வைத்திருக்கும் ஜிதேந்திர புஜாரா கூறுகிறார்: "இங்கு அரசாங்கமே இல்லை என நாங்கள் நினைக்கிறோம். அதனால் நாங்கள் எந்த வரியும் கட்டுவதில்லை. அரசாங்கம் என ஒன்றிருந்தால் எங்களை காப்பாற்ற ஏதாவது செய்திருக்கும்". தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த ஒரே வழி, அடுத்த பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதே என அம்மக்கள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மக்கள் திட்டமிட்டனர். ஆனால் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டிக்விஜய்சின்ஹ் - மாசு பிரச்சனை தீர்க்கப்படும் என உறுதி அளித்ததால் அத்திட்டம் கைவிடப்பபட்டது. தேர்தலில் வெற்றிபெற்று டிக்விஜய்சின்ஹ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஆனார். ஆனால் - அவரே, தன தொகுதி பிரச்சனையை இது வரை தீர்க்கவில்லை!

குஜராத் மாநில நீர் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தான் அறிவியல் பூர்வமாக ஆற்றினில் உள்ள கழிவுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது. ஆற்றுக்கு அருகில் உள்ள கிணறுகள் உப்பு தன்மை கொண்டுள்ளதை, நாக்பூரில் உள்ள National Environmental Engineering Research Institute (NEERI) நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வுகள் உறுதி செய்துள்ளது.

நீர் மாசு கட்டுப்பாட்டு சட்டம் நிர்ணயித்துள்ள மேல் முறையீட்டு ஆணையத்தில் கடந்தாண்டு DCW நிறுவனம் - ஆறு, மாசு அடையவில்லை என வாதிட்டுள்ளது. சுரேந்திரநகர் மாவட்ட அதிகாரிகள் - இந்நிறுவனம் மீது அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதான குற்றச்சாட்டையும், ஆற்றினில் மாசு ஏற்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டையும் வைத்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உள்ளூர் அதிகாரி இந்நிறுவனத்திற்கு 60,000 ரூபாய் அபராதம் விதித்து, ஆற்றினில் கழிவினை கலப்பதை நிறுத்தக் கூறி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து DCW நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது.

DCW நிறுவனம் 1925ம் ஆண்டு 1 கோடி ரூபாய் முதலீட்டில், தாரங்கதார மாகாணத்தின் மன்னர் கன்சியாம்சின்ஹால், துவக்கப்பட்டப்போது ஆண்டுக்கு 20,000 டன் சோடா ஆஷ் மட்டுமே இங்கு உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போது அது 65,000 டன் சோடா ஆஷ் என்றும், 2,000 டன் சோடா பைகார்போநேட் என்றும், 1000 டன் கால்சியம் க்ளோரைட் என்றும் உயர்ந்துள்ளது.

அருகில் உள்ள கிராமத்தினர் - கன்சியாம்சின்ஹ் (முதலாளியாக இருக்கும் போது), கழிவுகளை வண்டியில் ஏற்றி - காலியான கட்ச் பகுதியில் கொண்டு கொட்ட ஏற்பாடு செய்தார் என்று கூறுகிறார்கள். DCW நிறுவனம் 40களில், சாஹு ஸ்ரேயன்ஸ் பிரசாத் ஜெயின் என்பவரால் வாங்கப்பட்டது. குஜராத் மாநில நீர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், பிரதியுமான்சின்ஹ் ஜடேஜா கூறுகிறார்: "கழிவுகளை வேறு ஏதாவது வழியில் அழிக்க முயற்சி செய்யுங்கள் என DCW நிறுவனத்தை முடிந்த அளவு கேட்டுக்கொண்டு விட்டோம்".

DCW நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி இந்தர் குமார் கூறுகிறார்: "கழிவுகளை சுத்தீகரிக்கலாம், ஆனால் அது கட்டுப்படியாகாது."

DCW நிறுவனம் - கழிவுகளில் இருந்து 700 டன் CALCIUM CARBIDE மட்டுமே ஓர் ஆண்டில் மீட்கிறது. ஆனால் அங்கிருந்து உருவாகும் கழிவுகளில் இருந்து 70,000 டன் CALCIUM CARBIDE ஓர் ஆண்டில் மீட்கலாம். ஆனால் இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் இவ்வாறு மீட்க விரும்பவில்லை. ஏன் என்றால் CALCIUM CARBIDE க்கு சந்தையில் மவுசு கிடையாது என மாவட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

DCW தொழிற்சங்க தலைவர் பிரபோத் சின்ஹ் பர்மர் திறந்த மனதோடு கூறுகிறார்: "கிராம மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என நாம் உணர்ச்சிவசப்பட கூடாது. தாரங்கதாரா பகுதியின் பொருளாதாரம் இந்த ஒரு தொழிற்சாலையை நம்பி தான் உள்ளது. மாசுவை கட்டுப்படுத்த ஒரே வழி இந்த நிறுவனத்தை மூடுவது. ஆனால் - அவ்வாறு செய்தால், பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும்."

இந்த தொழிற்சாலையை மூடினால் இப்பகுதி பாதிக்கப்படும் என்பது உண்மை என்றாலும், இந்த தொழிற்சாலை இப்பிரச்சனையில் இருந்து வெளிவர ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளது. அவற்றில் சில கழிவுகளை மறு சுழற்சி செய்வது, ஆவியாக்கும் குட்டைகள் கட்டுவது, கட்ச் பகுதியில் கழிவுகளை கொட்ட 22 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைப்பது ஆகும்.


கட்டுரை முழுமையாக ஆங்கிலத்தில்

Gujarat: DCW factory effluents make Falku river water unfit for drinking and agriculture

Seventeen years ago Bahadursinh Jhala was the envy of Gujarat's Surendranagar district when he harvested a bumper 2,228 kg of foodgrain per acre on his farm. Today he counts himself lucky if he can squeeze out 200 kg of food grain from every acre of his land.

Bahadursinh is not the only farmer in the area whose yields have dropped dramatically; nearly 1,200 farmers living in four villages - Malwan, Vavdi, Isadra and Thala - on the banks of the river Falku all voice the same lament. Says farmer Ganesh Patel: "One day everyone in these four villages will revolt when the yield becomes very low and food becomes scarce."

The farmers blame their troubles on the nearby Dhrangadhra Chemical Works (DCW). They claim that effluents from the factory which are discharged into the River Falku are pushing up the salinity of the soil and making it infertile. They add that in the last few years the river has been slowly drying up and the effluents composed of sodium chloride, calcium chloride and other salts have slowly seeped into the water table of the area making water in nearby wells saline and unfit for drinking and agriculture.

Says Bahadursinh: "Even if the pollution is stopped today it will take at least seven years for the soil to return to normal." DCW stoutly denies the charges levelled against it by the villagers, and the state water pollution board. It is at the moment contesting cases filed against it by the state water pollution board in the district courts and the high court.

Says DCW Secretary C.M. Gandhi: "There is no pollution. This is only politics. We have been trying to make whatever improvements are possible. But they want us to spend Rs.2 crore and build a 25 km pucca gutter. That we cannot do."

Such claims cut little ice with the villagers. Every day the factory discharges nearly 1,500 to 3,000 cubic metres of effluents into the river. They claim that the excessive salinity is destroying their farms and harming their health. Dr D.K. Dabhi who runs the government dispensary at Malwan points out that sodium affects the muscles and heart and causes weakness. Sodium carbonate also gets deposited in the kidney.

For years the factory has resisted all efforts to stop it dumping effluents into the river. Seven years ago the villagers banded together and vowed not to pay taxes until their grievances were redressed. Four years ago they went a step further and formed a satyagraha samiti, which has organised several demonstrations, to act as a pressure group.

Says Jitendra Pujara, a Vavdi shopkeeper: "None of us pays any tax as we now feel that there is no government. If there was, something should have been done to save us." The villagers have decided that the only way they can show their displeasure with the Government is to abstain from voting in the next Lok Sabha elections.

They had planned to abstain during the last elections but they were dissuaded by the local MP Digvijaysinh who promised that the pollution problem would be solved. Ironically enough, Digvijaysinh went on to become Union environment minister but he has not yet done anything about the grievances in his own constituency.

The Gujarat Water Pollution Board has claimed in court that it has established by scientific tests that the effluent in the river does immense damage. The fact that water in the wells near the river had turned brackish was discovered by the National Environmental Engineering Research Institute of Nagpur when it conducted tests over a decade ago.

DCW, while deposing last year before an appellate authority to the Water Pollution Act, pleaded that the river is not polluted, DCW is also fighting the Surendranagar district administration which filed a case of encroachment on government land and of discharging effluent to the river. The local mamlatdar has also passed an order fining DCW Rs.60,000 and ordered the factory to stop discharging effluent to the river. This order was challenged in the Surendranagar civil court.

When DCW was set up in 1925 at a cost of Rs.1 crore by Maharaja Ghanshyamsinh of Dhrangadhra it used to produce only 20,000 tonnes of soda ash per year. Now, it has increased to 65,000 tonnes along with 2,000 tonnes of soda bicarbonate and 1,000 tonnes of calcium chloride per year.

The villagers around point out that Ghanshyamsinh ensured that effluent was loaded into wagons to be dumped into the barren Rann of Kutch. DCW was bought by Sahu Shreyans Prasad Jain in the late '40s. Points out Gujarat Water Pollution Control Board Chairman, Pradhyumansinh Jadeja: "We have tried our best to persuade DCW to at least start thinking in terms of alternative methods to dispose of the effluent."

Says Inder Kumar, public relations officer of DCW: "The effluent can be recycled, but it is not economical." DCW is only recovering 700 tonnes of calcium chloride a year from the waste, whereas it is possible to recover 70,000 tonnes. Since this chemical does not have much of market value the management is not interested in recovering it, said a district official.

Prabodhsinh Parmar, a union leader at DCW, also candidly says: "We cannot be emotional about the fact that the effluent is harming villagers. The whole economy of Dhrangadhra depends on this factory. The only way to stop pollution is to close down this factory. If it does, the economy of this area will collapse."

While it is true that closing down the factory will hurt the area, the fact remains that if the DCW were willing, there are more ways than one to get out of the mess. Some of them are recycling of the effluent, building evaporation ponds and building a 22-km pipeline which would carry the effluent to the Rann of Kutch.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அன்றைய 1984 ஆம் ஆண்டின் போது இந்த ஆலையின் செயல்பாடுகள் குறித்து அறியத்தந்தமைக்கும் - நன்றி..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36775

இந்தியா டுடே (மே 15, 1984) பதிப்பின் செய்திகளை முழுமையாக நகர் மக்களுக்கு பார்வைக்காகவும் இன்றைய தலைமுறைகளுக்கு அன்றைய 1984 ஆம் ஆண்டின் போது இந்த ஆலையின் செயல்பாடுகள் குறித்து அறியத்தந்தமைக்கும் - நன்றி..

1947 முதல் 2014 வரை "ஆட்சி மாறுது! ஆட்கள் மாறுகிறார்கள்! நம் நகரின் இராசயன தொழிற்சாலையால் ஏற்படும் அவலம் மட்டும் மாறுவதில்லையே ஏன்?"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [27 August 2014]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 36776

இன்னும் அதே ஊரிலேயே இந்நிறுவனம் தொடர்ந்து இயங்குகிறதா? அல்லது இழுத்து மூடிவிட்டு நம் ஊருக்கு இடம்பெயர்ந்துவிட்டதா?

தற்போதைய மாசுக்கட்டுவாரிய விதிகளின்படி அந்நிறுவனம் தனது கழிவுநீரை மறு சுழற்ச்சி முறையில் மீண்டும் தங்கள் தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சொட்டு நீரைக்கூட கடலில் கலக்க அனுமதிக்ககூடாது.

ஆனால் அரசு அதிகாரிகள் இதை சரியான முறையில் கண்காணிப்பதில்லை. ஆலையும் அரசு அதிகாரிகளும் ஒருவர் மற்றவரின் தேவைகளை பூர்த்திசெய்து திருப்தியடைந்துகொள்கின்றனர். இல்லையெனில் அதன் விரிவாக்கதிட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்க முடியுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by netcom buhari (chennai) [27 August 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36780

இவர்கள் இதை போண்டு அரை நூண்டண்டு காலமாக மக்கள் உயிரை பணயம் வைத்து சம்பாதித்து வருகின்டர்கள். கொஞ்சம் கூட மக்கள் கு கொடுக்கும் தொல்லை பற்றி நினைத்து பார்பதில்லை , நாம் இனியும் ஊர் மக்களை பலிகடா ஆக்வது சரி யாக தெரியவில்லை, இனிமேல் நாம் பண்ணும் முயற்சி பின் வரும் மக்கள் நிமதியுடன் வாழ வழிவகுக்கும்

ஆற்றினில் கழிவுகளை கலப்பதை நிறுத்த இந்நிறுவனம் தயாராக இல்லை. அதனால் - ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களின் குறைகள் தீர்க்கப்படும் வரை, வரி ஏதும் கட்டுவதில்லை என முடிவு செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், மேலும் ஒரு படி சென்று, சத்தியாக்ரஹ அமைப்பு ஒன்றினை துவக்கி, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.( copy &paste )

நாமும் இதை போண்டு goverment கு செலுத்த வேண்டிய tax சை செலுத்தாமல் ஒட்டு மொத்த ஊர் மக்கள் மட்டும் சுட்டுப்புற மக்களுடன் இணைந்து முயற்சி பண்ணினால் என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved