தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக, இவ்வாண்டு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணியருக்கான தடுப்பூசி முகாம், இம்மாதம் 26ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சுகாதாரத் துறை தூத்துக்குடி மாவட்ட இயக்குநர் உமா தலைமையில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி பிரதிநிதிகளான ஆஸிஃப் கான், ஃபக்ருத்தீன் அலீ அஹ்மத், அதன் தன்னார்வலரான நெய்னா முஹம்மத் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இம்முகாமில், மருத்துவர்களான ஆர்.விமல் குமார், கே.அகல்யா ஆகியோருடன் காயாமொழி, காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குழுவினரும் இணைந்து, முகாமில் 62 ஹஜ் பயணியருக்கும் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கினர்.
முகாம் ஏற்பாடுகளை, கே.எம்.டி. மருத்துவமனை மேலாளர் கே.அப்துல் லத்தீஃப் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ஹஜ் பயணியருக்காக நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கே.எம்.டி. மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |