காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 173 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, இன்று 16.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர், துணைச் செயலாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரபி ஆசிரியர் ஜுபைர் அலீ பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் அப்துல் ரஸ்ஸாக் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியா எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வரவேற்புரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விழாவிற்குத் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கியதோடு, மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, வினியோத்தைத் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பள்ளியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.
பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 173 மாணவர்களுக்கு இவ்விழாவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விழா ஏற்பாடுகளை, எஸ்.பி.பி.புகாரீ, மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள், அலுலவர்கள் செய்திருந்தனர்.
எல்.கே.மேனிலைப்பள்ளியில், 2013ஆம் ஆண்டில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகிக்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |