Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:25:30 AM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14371
#KOTW14371
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014
நெசவு ஜமாஅத் முன்னாள் தலைவரின் சகோதரரான ‘அஸ்ஸலாத் அப்பா’ காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சங்கனாச்சேரியில் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4713 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி - நெசவு ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மர்ஹூம் ஏ.எஸ்.எம்.புகாரீ அவர்களின் இளைய சகோதரரும், பள்ளிவாசல்களில் பெரும்பாலும் ஒலிபெருக்கி இல்லாதிருந்த அக்காலத்தில், பொதுமக்களை பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகைக்கு அழைப்பதற்காக ‘அஸ்ஸலாத்’, ‘அஸ்ஸலாத்’ என்று தெருக்களின் வழியே உரத்த குரலில் கூறி வந்ததன் மூலம் ‘அஸ்ஸலாத் அப்பா’ என அனைவராலும் அழைக்கப்பட்டவருமான - காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த வட்டப்பெட்டி அஹ்மத் ஸாலிஹ் ஹாஜியார், இன்று நண்பகல் 12.00 மணியளவில், கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 86. அன்னார்,

வட்டப்பெட்டி மர்ஹூம் செய்யித் இப்றாஹீம் அவர்களின் பேரனும்,

வட்டப்பெட்டி மர்ஹூம் ஹஸன் அப்துல் காதிர் அவர்களின் மகனும்,

காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி - நெசவு ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மர்ஹூம் ஏ.எஸ்.எம்.புகாரீ அவர்களின் இளைய சகோதரரும்,

மர்ஹூம் ஏ.எஸ்.எம்.மூஸா, ஏ.எஸ்.எம்.பிலால் ஆகியோரின் தந்தையும்,

ஹிழுறு முஹ்யித்தீன், ஹபீப் முஹம்மத் ஆகியோரின் தாய்மாமாவும்,

ஹஸன் இக்பால், ஜின்னா, ஆஸாத், இப்றாஹீம் தாரிக் ஆகியோரின் சிறிய தந்தையும்,

ஜஃபர் ஸாதிக், அப்துல் காதிர் ஆகியோரின் மாமனாரும்,

இப்றாஹீம் கலீல், அஃப்ஸல், அஹ்மத் ஸாலிஹ், இப்றாஹீம் ஸாஹிப், அஜ்மல், முஸ்தஃபா, கே.எம்.எஸ்.ஸாலிம் ரிஸ்வீ ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், சங்கனாச்சேரி புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

சங்கனாச்சேரியிலிருந்து...
தகவல்:
அமீர் ஷாஹுல் ஹமீத்
(+91 99444 36462)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by TARIQ (JEDDAH) [26 August 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36737

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருந்தி மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக. ஆமீன்

மர்ஹூமை இழந்து வாடும் அவரது மக்கள் , குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சபூர் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Kasim (Jeddah) [26 August 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36739

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருந்தி மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக.குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சபூர் எனும் பொருமைதனை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by netcom buhari (chennai) [26 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36741

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [26 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36742

மறுமை உலகமே நிரந்தரம். இந்த உலகம் தற்காலிகமானது தான் என்று நினைவு கொள்ளும் வகையில், தங்களது வீட்டுக்கு 'தற்காலிக இல்லம்' என்று பெயர் வைத்தவர்கள்.

மேலும் தப்லீக் ஜமாஅத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திய பெரியவர். இலங்கையில் மாணிக்க வியாபாரமும் செய்தார்கள். தங்கள் மறைவுக்கு பின்னர், தங்களது வாரிசுகள், சொத்துக்காக சண்டையிடக் கூடாது என்று, தங்களது ஜீவிய காலத்திலேயே, அதை பிரித்து வைத்து விட்டார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.

அன்னாரை இழந்து வாழும் அவரின் மக்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...தற்காலிக இல்லம்
posted by mackie noohuthambi (chennai) [26 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36743

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அவர்கள் வீட்டின் பெயரோ தற்காலிக இல்லம். அவர் தங்குவதோ அல்லாஹ்வின் இல்லம்.

அவர்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. ஆங்கில கடிதங்கள், அரசுக்கு கடிதங்கள் எழுதுவது என்றால் என்னிடம் ஓடி வந்து விடுவார்கள். எப்போதும் தொழுகை இபாதத், கண்ட நேரம் எல்லாம் ரசூலுல்லாஹ்வின் ஹதீத்கள் ஏதாவது சொல்லி நம் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாமல் போக மாட்டார்கள்

எனக்கும் இப்படி ஒரு தற்காலிக வீடு, தொலைபேசி டிவி மார்பில் போட்ட வீடு வேண்டுமே என்று அவரிடம் தமாஷாக சொல்வேன். தற்காலிக வீட்டை விற்று விட்டேன். அந்த போர்டை உங்கள் வீட்டில் நீங்கள் போட தயாரா என்று கேட்பார்கள். எல்லோரும் வாயளவில் துன்யாவில் என்னத்தைக் கொண்டு போகப்போகிறோம் என்று பேசுவோம் யாருக்கு அந்த தைரியம் வரும்.

ஆனால் அவர் எல்லாவற்றையும் முன்னேற்பாடு செய்து வைத்து விட்டேன். மக்களுக்கு சேர வேண்டிய ஹக்குகள் எல்லாம் முறைப்படி செய்து விட்டேன். இனி மீதி நாட்களை அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்க புறப்பட்டு விட்டேன் என்று கூறி அதன் படியே தன் காலத்தை செலவழித்தவர்கள் அவர்களுடன் தப்லீக் ஜமாத்தில் போனால் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம். மார்க்க விஷயத்துடன் நகை சுவையாக பல விஷயங்கள் நிறையவே அவரிடம் மனம் விட்டுப் பேசலாம். கோவப்பட மாட்டார்கள். அல்லாஹு அக்பர்.

சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து முழுமையாக வாழ்ந்து அல்லாஹ்விடம் சேர்ந்திருக்கிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் நல் அமல்களை கபூல் செய்து அவர்களின் மண்ணறையை சுவன பூங்காவாக ஆக்கி வைப்பானாக . அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. அவர்களை போல் மார்க்க விஷயங்களில் பேணுதலாக நடந்து நல் அமல்கள் செய்து நாமும் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற திரு கலிமாவை மொழிந்தவர்களாக மரணிக்க செய்வானாக.

அவர்களின் குடும்பத்தார்கள் சிறப்பான ஒரு குடும்பத்தலைவரை பெற்றதற்காக அல்லாஹ்வை சுக்ரு செய்யுங்கள். அவர்கள் போல் நல் அமல்கள் செய்து வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக. யாரையும் காயப்படுத்தாமல் யாருக்கும் ஒரு குறை வைக்காமல் யாருக்கும் சிரமமாக - பாரமாக இல்லாமல் சென்றவர்களுக்காக எல்லோரும் து ஆ செய்யுங்கள். உங்கள் எல்லோருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை தாருவானாக.

நேரில் சென்று அவர்கள் ஜனாஸாவில் கலந்து கொள்ள ஆசைதான். உடல் நிலையும் ஊர் தூரமும் அதற்கு இடம் தரவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்காக 30 ஜுசு ஓதி ஈஸால் தவாபு செய்கிறேன், இன்ஷா அல்லாஹ்.. அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வானாக.ஆமீன். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [26 August 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36746

அஸ்ஸலாமு அலைக்கும்,

>>>>>. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் <<<< வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [26 August 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36749

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Cnash (Makkah) [26 August 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 36753

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் பொறுத்து அருள்வானாக. . அவர்கள் செய்த நல அமல்களை ஏற்றுக் கொள்வானாக. அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை கொடுத்து அருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by A.R.Refaye (Abudhabi) [26 August 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36754

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.

A.R.Refaye-அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Haddadh (Thrissur) [26 August 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 36755

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் பொறுத்து அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை கொடுத்து அருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [26 August 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36758

அஸ்ஸலாமு அலைக்கும்,

அப்பா அவர்களின் தோற்றம் எளிமையும் கண்ணியமும் கலந்த ஒரு சிறப்பான தோற்றம் .

காலம் தவறாமல் இறைவனை தொழுவதற்கு மக்களை அழைத்து கொண்டு இருந்த ‘அஸ்ஸலாத் அப்பா’ அவர்கள் .

இறைவனின் அழைப்பை பொருந்தி கொண்டு பயணமான நம் அஸ்ஸலாத் அப்பா’ இன்ஷா அல்லாஹ் இறைவனின் அன்பு அழைப்பாளராக , வல்ல ரஹ்மான் போதுமானவன் .......

இன்ஷா அல்லாஹ் இறைவன் ‘அஸ்ஸலாத் அப்பா’ அவர்களுக்கு சுவனத்தின் உயர் பதவிகளை கொடுபானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [26 August 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36759

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் பொறுத்து அருள்வானாக. . அவர்கள் செய்த நல அமல்களை ஏற்றுக் கொள்வானாக. அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை கொடுத்து அருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [26 August 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36760

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்..."

இவர்கள் ஒரு சிறந்த தக்வா தாரியான மனிதர்.." இங்கு இவர்களின் சிறப்பை பற்றி அனைவரும் எழுதி இருந்தார்கள்.." இதில் விடுபட்ட ஒரு முக்கியமான விஷயம் & சிறப்பு, இவர்கள் ஹயாத்தாக உள்ள காலத்திலேயே தன்னால் யாருக்கும் கஷ்டம் வந்து விடக்கூடாது என்பதற்காக இவர்கள் வீட்டில் எப்பொழுதும் கூடவே கபன் துணியையும் தயார் நிலையில் வைத்து கொண்டதாக ஒரு தடவை என் தந்தையார் கண்ணீர் மல்க கூற நான் கேட்டுள்ளேன்.

வல்ல அல்லாஹ் இவர்களின் கபுரை விசாலமாகயும் , ஒளி பிரகாசமாகயும் ஆக்கி அருள் புரிவானாக.."ஆமீன்..."

அல்லாஹும்மக்பிர்லஹு வர்ஹம்ஹு..."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Inna lillahi wa inna ilaihi rajuhoon.
posted by shaik mohamed (Dubai) [26 August 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36765

We really missed very polite, honesty and religious gentlemen from our town especially nesavoo jamath. We had growned under his light of good leason starting from Prayer in the mosque. . My deepest condolence to all the family members.May Allah give place in Jannah to Ahamed Salih Hajiar. Aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Abdul Hadhi (JEDDAH AL RUWAIS) [27 August 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36768

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் பொறுத்து அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை கொடுத்து அருள்வானாக. ஆமீன்

அப்துல் ஹாதி ஜெட்டாஹ் KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. தற்காலிக இல்லத்தை விட்டும் நிரந்தர வீட்டை அடைந்தார் !
posted by K.V.A.T.HABIB (QATAR) [27 August 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 36769

என் தாயார் அவர்களும் , மர்ஹூம் சாலிஹ் ஹாஜியார் அவர்களும் , சதுக்கைத் தெரு காதர் (சாமுனா லெப்பை )ஹாஜியார் அப்பா (நமதூருக்கு முதன்முதலில் சைக்கிள் ரிக்க்ஷா அறிமுகம் செய்தவர்கள் ) அவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஒரே குரூப்பில் 1972 இல் புனித ஹஜ்ஜுக்கடமை ஆற்றியவர்கள்.

என் தாயாரோடு தன் பெற்ற பிள்ளைக்கு காட்டும் அன்பையும் பாசத்தையும் காட்டியவர்கள். மிகவும் எளிமையான வாழ்வினை இந்த துனியாவில் வாழ்ந்து காட்டியவர்கள். சதாவும் அல்லாஹ்வின் சிந்தனையில் தன்னை முழுமையாக அற்பணித் தவர்கள் .

35 வருடங்கள் கழித்து அவர்களை நான் சந்தித்த போது , அப்பா அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்து , அளவளாவியபோது , கொஞ்சமும் மறவாமல் , என் மகள் தன் தாயார் எப்படி இருக்கிறார்கள் என்று பாசம் பொங்க அவர்கள் என்னிடம் குசலம் விசாரித்ததை எண்ணி வியந்தேன்.

அந்த அளவுக்கு நல்ல நினைவாற்றலோடு , தாங்கள் ஹஜ்ஜின் போது நடந்த சில சம்பவங்களை கூறி , பெருமிதம் கொண்டார்கள் . அந்த அளவுக்கு , பாசம் மிகும் அப்பா சாலிஹ் ஹாஜியார் அவர்களின் வஃபாத்து செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். வல்ல ரஹ்மானின் திருப்பொருத்ததுக்காகவே வாழ்ந்து மறைந்த மாமனிதரைப்போன்று நாமும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் .

அவர்களின் நற்பண்புகளை பின்பற்றி , இம்மை மற்றும் மறுமை வாழ்வை செப்பனிட வல்ல அல்லாஹ். நமக்கு தவ்ஃ பீக் செய்தருள் புரிவானாகவும். ஆமீன் . மர்ஹூம் சாலிஹ் ஹாஜியார் அப்பா அவர்களின் மண்ணறையை சுவனத்து பூங்காவாக ஆக்கி , மறுமையில் மேலான ஜன்னதுல் ஃ பிர்தவ்சில் அஃ லா வெனும் சுவன பதி அடையச் செய்வானாக ..ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் , அழகிய பொறுமையை வழங்குவானாக , ஆமீன். அனைவர்க்கும் எங்களின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் .

மாறாத அன்புடன் ,
K.V. A.T. குடும்பத்தினர்
முத்து மஹால்
குறுக்குத்தெரு
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou, China) [27 August 2014]
IP: 199.*.*.* Canada | Comment Reference Number: 36770

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருந்தி மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக.குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சபூர் எனும் பொருமைதனை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Fazul Rahman (dubai) [27 August 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36774

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் பொறுத்து அருள்வானாக. . அவர்கள் செய்த நல அமல்களை ஏற்றுக் கொள்வானாக. அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை கொடுத்து அருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by mohamed abdul kader (dubai) [27 August 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36777

இன்னலிலஹி வஇன்ன இலைஹி ராஜிஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [27 August 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 36779

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருந்தி மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக.குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சபூர் எனும் பொருமைதனை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [27 August 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 36785

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [30 August 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36898

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. தற்காலிக வாழ்வு வாழ்ந்தவர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [30 August 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36900

‘தற்காலிக வீடு’ என தன் வீட்டு முகப்பில் கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்ததை வைத்தே, இவர்களது உள்ளச்சத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே என்னால் உணர முடிந்தது.

‘அஸ்ஸலாத்’ என தொழுகைக்கு அனைவரையும் அழைத்த தகவல் இவர்கள் வஃபாத்தாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் என் காதில் விழுந்தது.

எந்த வம்புதும்பிலும் ஈடுபடாமல், இறைவணக்கத்திலேயே தன் வாழ்வைக் கழித்தவர்கள். தனக்குப் பிறகு பிள்ளைகளுக்கிடையில் ஒற்றுமை குலையாதிருக்க, என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் தன் வாழ்நாளிலேயே செய்து முடித்து, அனைத்து மக்களின் திருப்தியைப் பெற்றுச் சென்றுவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved