போதிய உறுப்பினர்கள் வருகை தராததால், காயல்பட்டினம் நகர்மன்றத்தில் இன்று மதியம் நடைபெறவிருந்த அவசரக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் இன்று 14.30 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில், நகர்மன்றக் கூட்டரங்கின் கீழ்ப்பகுதியிலுள்ள வெளி வராந்தாவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பின்வருமாறு 30 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் இயற்றப்படவிருந்தது:-
இக்கூட்டத்தில், 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர். கூட்டம் நடத்துவதற்குத் தேவையான அளவு உறுப்பினர்கள் (கோரம்) இல்லாததால், நகர்மன்றத் தலைவர் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முந்தைய கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |