காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகிக்கும் நிகழ்ச்சி, இம்மாதம் 13ஆம் நாளன்று 15.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றியதோடு, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அவருக்கு, பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். பள்ளியின் கணித ஆசிரியை பீர் ஃபாத்திமா பீவி நன்றி கூறினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில், 2011ஆம் ஆண்டில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகிக்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |