காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளது.
9ஆம் ஆண்டு நிகழ்ச்சி, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” எனும் தலைப்பில், 21.06.2014 சனிக்கிழமையன்று காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குறித்த சுருக்கச் செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
கலந்துரையாடல் நிகழ்ச்சி, பரிசளிப்பு விழா:
அன்று 17.00 மணிக்கு, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருடன் மாநில சாதனை மாணவர்கள் சந்திக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், 19.30 மணிக்கு, பரிசளிப்பு விழாவும் நடைபெற்றன.
இவ்விழாவில், நகர பள்ளிகளிலிருந்து 10ஆம், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளை எழுதி, நகரளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதுகுறித்த விரிவான தகவல்கள்:-
ப்ளஸ் 2 வரலாறு பாடத்தில் மாநிலத்தில் முதலிடம்:
12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் - காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த ஜாஃபர் ஸாதிக் என்பவரது மகன் ஜெ.எஸ்.முஹம்மத் சுஹைல், வரலாறு பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றார். அவருக்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினர் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ அவற்றை வழங்கினார்.
ப்ளஸ் 2 வகுப்பில் நகரளவில் முதல் மூன்றிடங்கள்:
12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்,
காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி, அப்பாபள்ளித் தெருவைச் சேர்ந்த எஸ்.ஏ.சி.முஹம்மத் முல்தஜிம் என்பவரது மகள் எம்.அஹ்மத் ஃபாத்திமா உம்மு அய்மன் - 1200க்கு 1169 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் முதலிடமும்,
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர், காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த செய்யித் முஹம்மத் ஷாதுலீ என்பவரது மகன் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் சுல்தான் - 1200க்கு 1167 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் இரண்டாமிடமும்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி, காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த எஸ்.பாலசுப்பிரமணியன் என்பவரது மகள் பி.மேனகா - 1200க்கு 1156 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் மூன்றாமிடமும் பெற்றனர்.
இவர்களுக்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அனுசரணையில், முறையே ரூபாய் 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை, அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் பரிசுகளை வழங்கினார்.
நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு, விழாவிற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், ‘சாதிக்க ஆசைப்படு’ எனும் தலைப்பிலான நூலை பரிசாக வழங்கினார்.
முதல் மாணவி சார்பாக, அவரது உறவினர்கள் பரிசு, சான்றிதழைப் பெற்றனர். சான்றிதழை, இக்ராஃ கல்விச் சங்க முன்னாள் தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வழங்கினார்.
10ஆம் வகுப்பில் முதல் மூன்றிடங்கள்:
10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், 500க்கு 495 மதிப்பெண்களைப் பெற்று, நகரளவில் முதல் மூன்றிடங்களை 3 மாணவ-மாணவியர் பெற்றனர்.
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் - காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியைச் சேர்ந்த ஐ.அபூதாஹிர் என்பவரது மகன் ஏ.அய்ஸர் முஹம்மத், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி - காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியைச் சேர்ந்த எஸ்.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரது மகள் எம்.ஏ.கே.சித்தி மதனீ, அதே பள்ளி மாணவி - காயாமொழியைச் சேர்ந்த பீ.மகாராஜன் என்பவரது மகள் எம்.எஸ்.சூர்ய ப்ரபா ஆகியோர் முதல் மூன்றிடங்களைப் பெற்றோராவர்.
10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், நகரளவில் சாதனை மதிப்பெண் (Record Break Mark) பெறுவோருக்கு, காயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் மர்ஹூம் எம்.கே.டீ.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் நினைவாக, அவர்களது குடும்பத்தார் சார்பில் ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்படுவது வழமை.
நடப்பாண்டில் இம்மூவரும் பெற்ற இம்மதிப்பெண்கள், நகர சாதனை மதிப்பெண்கள் என்பதால், மேற்படி பரிசுகள் அக்குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்டது. மர்ஹூம் எம்.கே.டீ.முஹம்மத் அபூபக்கர் மகன் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ அப்பரிசுகளை மாணவ-மாணவியருக்கு வழங்கினார்.
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி - காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரைச் சேர்ந்த எம்.எம்.செய்யித் அபூதாஹிர் என்பவரது மகள் எஸ்.ஏ.டீ.முகத்தஸா, 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் இரண்டாமிடத்தையும், எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் - காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த எம்.ஏ.முஹம்மத் ஹஸன் என்பவரது மகன் எம்.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
இவர்களுக்கு, கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில், முறையே ரூபாய் 3 ஆயிரம், 2 ஆயிரம் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. அம்மன்றத்தின் உறுப்பினர் ஹுஸைன் ஹல்லாஜ் அவற்றை வழங்கினார்.
திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ் மாணவ-மாணவியருள் - 10ஆம், 12ஆம் வகுப்புகளில் சிறப்பிடங்களைப் பெற்றோருக்கும் இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் - காயல்பட்டினம் ட்ரைவர் காலனியைச் சேர்ந்த ஹஸன் அப்துல் காதிர் என்பவரது மகன் ஹாஃபிழ் எச்.ஏ.கே.முஹம்மத் அவ்ஃபர், 1200க்கு 1010 மதிப்பெண்கள் பெற்று, நகர ஹாஃபிழ் மாணவர்களுள் முதலிடம் பெற்றவரானார். அவருக்கு, துபை காயல் நல மன்றத்தின் சார்பில் ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் சார்பில் அதன் முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.மெஹர் அலீ பணப்பரிசை வழங்க, மாணவர் சார்பில் அவரது தந்தை பெற்றுக்கொண்டார்.
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் - காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த காதிர் ஸாஹிப் மரைக்கார் என்பவரது மகன் ஹாஃபிழ் கே.எஸ்.முஹம்மத் இம்ரான், 1200க்கு 864 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றவரானார். அவருக்கு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசை, அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ,இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ வழங்கினார்.
10ஆம் வகுப்பு தேர்வெழுதிய ஹாஃபிழ் மாணவர்களுள், எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் - காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த எம்.எஸ்.எல்.காஜா முஹ்யித்தீன் என்பவரது மகன் ஹாஃபிழ் கே.எம்.முஹம்மத் அப்துல் ரஸ்ஸாக், 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பெற்றார். அவருக்கு துபை காயல் நல மன்றத்தின் சார்பில் ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் பரிசை வழங்கினார்.
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் - காயல்பட்டினம் சின்ன நெசவுத் தெருவைச் சேர்ந்த எம்.இக்பால் என்பவரது மகன் ஹாஃபிழ் ஐ.முஹம்மத் ஜெய்னுல் ஆப்தீன், 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாமிடத்தைப் பெற்றார்.
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் - காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த கே.எம்.எஸ்.மீராஸாஹிப் என்பவரது மகன் ஹாஃபிழ் எம்.எம்.எஸ்.காதிர் ஸாஹிப் ஜாஸிம், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எஸ்.ஏ.ஷெய்கு ஹல்ஜீ என்பவரது மகன் ஹாஃபிழ் எஸ்.எச்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஆகியோர், 500க்கு 452 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாமிடத்தைப் பெற்றனர்.
இவர்களுக்கு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாமிடம் பெற்ற மாணவருக்கு ரூபாய் 2 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூபாய் ஆயிரமும் பணப்பரிசு வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ,இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ அப்பரிசுகளை வழங்கினார்.
தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்றோர்:
10ஆம், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில், தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் (Subject Centum) பெற்ற மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
10ஆம் வகுப்பில் தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் (100க்கு 100) பெற்ற மாணவ-மாணவியர் விபரப்பட்டியல் வருமாறு:-
12ஆம் வகுப்பில் தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் (200க்கு 200) பெற்ற மாணவ-மாணவியர் விபரப்பட்டியல் வருமாறு:-
சிறந்த கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றோருக்கு ரியாத் கா.ந.மன்றம் பரிசு:
12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு பெற்றாலும், சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண்களை (கட் ஆஃப்) அதிகளவில் பெற்றிருந்தால்தான், பொறியியல் - மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால், அதுகுறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஊட்டுவதற்காக, ரியாத் காயல் நல மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றோருக்கும் பணப்பரிசு வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற மாணவ-மாணவியர் விபரப்பட்டியல் வருமாறு:-
1200க்கு 1000 மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றோர்:
12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1200க்கு 1000 மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அம்மாணவர்களின் விபரப்பட்டியல் (இப்பட்டியலையே, நகரளவிலான தர வரிசைப் பட்டியலாகவும் கொள்ளலாம்.) வருமாறு:-
இம்மாணவ-மாணவியர் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு மூத்த உறுப்பினர்களான எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் எம்.இ.எல்.நுஸ்கீ, அதன் உறுப்பினர் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (கே.சி.ஜி.சி.) நிர்வாகி எஸ்.இப்னு ஸஊத், நகரப் பிரமுகர்களான எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, வாவு எஸ்.காதிர் ஸாஹிப், இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினர் வாவு எஸ்.அப்துல் கஃப்பார், முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களான வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, வாவு எம்.எம்.முஃதஸிம், இக்ராஃ மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ.புகாரீ, இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினர் எம்.ஏ.எஸ்.ஜரூக், எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப், எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஆர்.எஸ்.அப்துல் காதிர், இக்ராஃ செயற்குழு உறுப்பினரும், ஜித்தா காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதியுமான ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், துபை காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், ஐ.ஐ.எம். பைத்துல்மால் நிர்வாகி எஸ்.எம்.அமானுல்லாஹ், இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், இக்ராஃ செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் மீனா சேகர் ஆகியோர் பரிசுகளையும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினர். நேரில் வர இயலாத மாணவ-மாணவியர் சார்பில், அவர்களின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளை, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நெறிப்படுத்தினார்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
நடப்பாண்டு நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ - கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ – பரிசளிப்பு விழா நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ – பரிசளிப்பு விழாவில், சிறந்த பள்ளிகளுக்கான பணப்பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ நிகழ்ச்சியில், நகரின் சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ நிகழ்ச்சியில், நகரின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள், பணப்பரிசுகள் வழங்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! (இதர செய்திகளை, இதே செய்தியில் வழங்கப்பட்டுள்ள இணைப்புகளில் சொடுக்கிக் காணலாம்.)
[செய்தி திருத்தப்பட்டது @ 17:19 / 27.08.2014] |