இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழா குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இம்மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அதன் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸில் வளாகத்தில் சுதந்திர தின விழா, காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தேசிய கொடியேற்ற, கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியில், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நகர தலைவர் தலைமையுரையாற்றினார். நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தி கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம் இறைப்பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், இளைஞரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர நிர்வாகிகளான எம்.கே.முஹம்மத் அலீ, எம்.இசட்.ஸித்தீக், அரபி ஷாஹுல் ஹமீத், எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், முன்னாள் பொருளாளர் எம்.எம்.அஹ்மத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட சுதந்திர தின விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு சுதந்திர தின விழா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |