இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, ஹாங்காங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் சுதந்திர தின விழா இன்று காலையில் நடைபெற்றது.
அந்நாட்டிற்கான இந்திய தூதர் ப்ரசாந்த் அகர்வால் தேசிய கொடியேற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார்.
பின்னர், ஹாங்காங் வாழ் காயலர்கள் உள்ளிட்ட இந்திய சிறுவர் - சிறுமியர், இந்திய கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாற்றை நினைவுகூரும் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பித்தனர்.
நிறைவில், இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியர்கள் - ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தமிழ் வகுப்பு குறித்து அவரிடம் விளக்கினர். அனைத்தையும் கேட்டறிந்த அவர், இந்தியர்களின் நலனுக்காக தகுந்த அனைத்து வழிகளிலும் தன்னைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர்களிடம் கூறினார்.
தகவல் & படங்கள்:
தைக்கா உபைதுல்லாஹ்
நடப்பாண்டு சுதந்திர விழா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |