இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் இன்று காலை 09.15 மணியளவில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
பள்ளி நிர்வாகிகளும், நகரப் பிரமுகர்களுமான ஆர்.எஸ்.அப்துல் காதிர் தலைமை தாங்க, வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, எஸ்.ஏ.முஹம்மத் அலீ, ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், ஜெஸ்மின் ஏ.கே.கலீலுர்ரஹ்மான், டாக்டர் பி.ஏ.எம்.ஜாஃபர் ஸாதிக், ஏ.கே.ஷம்சுத்தீன், கே.எம்.டி.சுலைமான், ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ, ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஹாஃபிழ் எம்.எல்.ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் டி.ஸ்டீஃபன் வரவேற்றுப் பேசினார். ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் தேசிய கொடியேற்ற, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அவர் சுதந்திர தின உரையாற்றி, சாதனை மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
மாணவர் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மகளிர் பிரிவு சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு எம்.ஏ.கே.கிதுரு ஃபாத்திமா தலைமை தாங்கினார். எம்.ஏ.சுபைதா தேசிய கொடியேற்றி வைக்க, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அவர் சுதந்திர தின உரையாற்றி, சாதனை மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவியரான நஸீஃபத் ஸக்கீனா வரவேற்புரையாற்ற, ஆர்.இசட்.ஆயிஷா ஹினாயா நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியை எம்.ஒய்.முஹம்மத் ஹஸீனா ஒருங்கிணைப்பில், பள்ளியின் ஆசிரியையர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி)
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட சுதந்திர தின விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு சுதந்திர விழா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |