இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் சென்ட்ரல் துவக்கப் பள்ளியில் இன்று காலை 08.30 மணியளவில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்க, எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ஏ.எச்.நெய்னா ஸாஹிப், எம்.ஏ.அப்துல் ஹக், வி.ஐ.ஜெய்னுல் ஆப்தீன், எம்.டி.ஜாஃபர் ஸாதிக், வி.எஸ்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர்கள் இறைவணக்கப் பாடல் பாட, தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் எஸ்.பாபு வரவேற்புரையாற்றினார்.
வாவு அறக்கட்டளை நிர்வாகக் குழு உறுப்பினர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தேசிய கொடியேற்ற, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டதோடு, கொடி வாழ்த்துப் பாடல் பாடினர்.
பள்ளி ஆசிரியர் ஏ.ஏ.பீர் முஹம்மத் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
தகவல்:
A.பீர் முஹம்மத்
மற்றும்
N.ரஃபீக் அஹ்மத்
(ஆசிரியர்கள், சென்ட்ரல் பள்ளிகள்)
சென்ட்ரல் துவக்கப்பள்ளி சார்பில் கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட சுதந்திர தின விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு சுதந்திர விழா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 17:59 / 16.08.2014] |