இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் இன்று காலை 09.00 மணியளவில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி தலைமை தாங்க, எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, ஏ.எச்.நெய்னா ஸாஹிப், எம்.ஏ.அப்துல் ஹக், வி.ஐ.ஜெய்னுல் ஆப்தீன், எம்.டி.ஜாஃபர் ஸாதிக், வி.எஸ்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர் ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்த, பள்ளி தலைமையாசிரியர் கே.ஷாஹுல் ஹமீத் வரவேற்புரையாற்றினார்.
வாவு அறக்கட்டளை நிர்வாகக் குழு உறுப்பினர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தேசிய கொடியேற்ற, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பள்ளி ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ சுதந்திர தின உரையாற்றினார். நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் நெறிப்படுத்தினார்.
விழா நிறைவில், மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. மேடையில் அங்கம் வகித்தோர் அவற்றை மாணவர்களுக்கு வழங்கினர்.
பள்ளி ஆசிரியர் எம்.கே.ஷெரீஃப் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
தகவல்:
A.பீர் முஹம்மத்
படங்கள்:
N.ரஃபீக் அஹ்மத்
(ஆசிரியர்கள், சென்ட்ரல் பள்ளிகள்)
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி சார்பில் கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட சுதந்திர தின விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு சுதந்திர விழா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |