இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஒய்.கே.சின்ஹா இவ்விழாவில் இந்திய தேசிய கொடியேற்றினார். பின்னர், அவருக்கு இலங்கை வாழ் இந்தியர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) சார்பில் அதன் தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான், இந்திய தூதரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் - தமிழகத்திற்குமிடையே பயணியர் கப்பல் சேவை அவசியம் என காவாலங்கா தலைவர் இந்திய தூதரிடம் தெரிவித்ததாகவும், அதற்கு இலங்கை தலைமன்னாரிலிருந்து, தமிழகத்தின் தனுஷ்கோடி வரை பயணியர் கப்பல் சேவை துவங்கும் என்றும், அதற்காக தலைமன்னாருக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு வருவதாகவும், இதை சுதந்திர தின செய்தியாகத் தெரிவிப்பதாகவும் தன்னிடம் கூறியதாக காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு சுதந்திர விழா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காவாலங்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |