காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில், அப்பள்ளி வளாகத்தில் இம்மாதம் 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணி முதல் 22.00 மணி வரை, திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டியும், 13ஆம் நாள் புதன்கிழமையன்று மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
திருக்குர்ஆன் மனனத் திறனாய்வுப் போட்டிகள்:
திருக்குர்ஆன் மனனத் திறனாய்வுப் போட்டிகளுக்கு, கும்பகோணத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஹ்மத் கபீர் மன்பஈ, கோயமுத்தூரைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் காரீ நவ்ஃபல் ஹஸனீ, உமராபாத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் காரீ மளீஉர்ரஹ்மான் உமரீ ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
திருமறை குர்ஆனில் 5 ஜுஸ்உகள் மட்டும் மனனம் செய்தோர், 15 ஜுஸ்உகள் மனனம் செய்தோர், குர்ஆன் முழுதும் மனனம் செய்தோர் என வகைப்படுத்தி, 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் - மதுரை, மேலப்பாளையம், ஆத்தூர், காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 51 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
பரிசளிப்பு விழா மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி:
போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா மற்றும் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஆகியன, இம்மாதம் 13ஆம் நாள் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை நடைபெற்றது.
பள்ளியின் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளை, ஹாங்காங் எம்.ஏ.ஹாஜா அரபீ, தம்மாம் எம்.எம்.செய்யித் இஸ்மாஈல், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ ஆகியோர் நெறிப்படுத்தினர். நிகழ்ச்சி தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மார்க்க சொற்பொழிவு:
மவ்லவீ இஸ்மாஈல் ஸலஃபீ “குர்ஆன் - ஹதீஸ் அணுகுவது எப்படி?” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
மவ்லவீ முபாரக் மதனீ “இஸ்திகாமத் - கொள்கையில் உறுதி” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இவ்விருவரின் உரைகளிலிருந்தும், பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, பரிசுக்குரியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெண்களுக்கும் தனியாக கேள்விகள் கேட்கப்பட்டன.
இது தவிர, இரு மார்க்க அறிஞர்களின் உரைத் தலைப்புகள் தொடர்பாக பொதுமக்கள் கேள்வி கேட்டு விளக்கம் பெற வாய்ப்பளிக்கப்பட்டது. ஆண் - பெண் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் காகிதத்தில் எழுதிக் கேட்ட கேள்விகளுக்கு இரு மார்க்க அறிஞர்களும் விளக்கமளித்தனர்.
பரிசளிப்பு விழா:
பின்னர் துவங்கிய பரிசளிப்பு விழாவில், 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நடுவர்கள் சார்பாக, மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஹ்மத் கபீர் மன்பஈ பரிசுக்குரியோர் பெயர்களை அறிவித்தார். பரிசுகளைப் பெற்றோர் விபரம் வருமாறு:-
I. 30 ஜுஸ்உ பிரிவு:
முதல் பரிசு [15 ஆயிரம் ரூபாய்]:
ஹாஃபிழ் எம்.ஏ.அபுல் காஸிம் பரக்கத்துல்லாஹ்
த.பெ. எம்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர்
காயல்பட்டினம்
இரண்டாவது பரிசு [10 ஆயிரம் ரூபாய்]:
ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.ஃபாஸில் முஹம்மத்
த.பெ. எஸ்.ஷெய்க் அப்துல் காதிர்
காயல்பட்டினம்
மூன்றாவது பரிசு [5 ஆயிரம் ரூபாய்]:
ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான்
த.பெ. மர்ஹூம் எஸ்.என்.காஜா ஸுலைமான்
காயல்பட்டினம்
II. 15 ஜுஸ்உ பிரிவு:
முதல் பரிசு [10 ஆயிரம் ரூபாய்]:
எஸ்.என்.அஹ்மத் அம்மார்
த.பெ. எம்.எஸ்.ஷெய்க் அலீ நுஸ்கீ
காயல்பட்டினம்
இரண்டாவது பரிசு [7 ஆயிரம் ரூபாய்]:
எம்.எல்.ஹஸன் நுஃபைஸ்
த.பெ. எம்.எச்.முஹம்மத் லெப்பை
காயல்பட்டினம்
மூன்றாவது பரிசு [4 ஆயிரம் ரூபாய்]:
எம்.ஏ.செய்யித் முஹம்மத் புகாரீ
த.பெ. மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ
காயல்பட்டினம்
III. 5 ஜுஸ்உ பிரிவு:
முதல் பரிசு [7 ஆயிரம் ரூபாய்]:
எம்.அப்துல் ரஊஃப்
த.பெ. ஏ.முபாரக் அலீ
காயல்பட்டினம்
இரண்டாவது பரிசு [5 ஆயிரம் ரூபாய்]:
எஸ்.பி.இன்ஆமுல் ஹஸன்
த.பெ. எஸ்.ஆர்.பஷீர் அஹ்மத்
மேலப்பாளையம்
மூன்றாவது பரிசு [3 ஆயிரம் ரூபாய்]:
ஏ.எம்.ரஸீன்
த.பெ. மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ
காயல்பட்டினம்
இம்மாணவர்கள் அனைவருக்கும் பணப்பரிசுடன் சான்றிதழும் வழங்கப்பட்டது.
ஆறுதல் பரிசு:
போட்டிகளில் பங்கேற்ற 42 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக, இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைச் சரிதத்தைக் கூறும் “அர்ரஹீக்குல் மஃக்தூம்” எனும் நூலின் தமிழ் மொழியாக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
நடுவர்களுக்கு சிறப்புப் பரிசு:
போட்டிகளின் நடுவர்களை கண்ணியப்படுத்தும் வகையில் அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கேள்விகளுக்கு சரியான விடையளித்தோருக்கும் பரிசு:
மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவையொட்டி, அவர்களால் பேசப்பட்ட அம்சங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையளித்தோருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மகளிருக்கு தனியாக பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முன்னாள் தலைவர் எஸ்.ஐ.தஸ்தகீர், நடப்பு தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ, துணைத்தலைவர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் உள்ளிட்டோர் வழங்கினர்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
ஏற்பாடு:
ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் பொருளாளர் எம்.என்.எம்.ஐ.மக்கீ ஒருங்கிணைப்பில், அதன் நிர்வாகிகளான எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எஸ்.எம்.அமானுல்லாஹ், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.ஏ.அப்துல் ஜப்பார், எஸ்.அப்துல் வாஹித், ஒய்.எம்.ஸாலிஹ், குளம் கே.எஸ்.முஹம்மத் யூனுஸ், டி.வி.எஸ்.ஜக்கரிய்யா உட்பட பலர் செய்திருந்தனர்.
தகவல் உதவி:
தம்மாம் இஸ்மாஈல்
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |