சென்னையில் வசித்து வரும் காயல்பட்டினம் சார்ந்த சமுக ஆர்வர் எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ். இவரின் ரத்த பிரிவான A1B நெகடிவ் ஓர் அரிய வகை ரத்தப் பிரிவாகும். பல நாடுகளில் 1 சதவீத மக்களுக்கும் கீழே தான் இந்த வகை ரத்தம் உள்ளது என கூறப்படுகிறது.
1993ம் ஆண்டு முதல் இதுவரை 47 முறை ரத்த தானம் செய்துள்ள இவர், மத நல்லிணக்கம் உட்பட பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். ஆகஸ்ட் 11 அன்று சென்னையில் இருந்து வெளிவரும் மாலை ஆங்கில நாளிதழான CHENNAI METRO சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இவருக்கு தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசையா - சமுக சேவைக்கான வாழ்நாள் சாதனை விருது வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, ரஷ்ய நாட்டின் தென் இந்திய தூதர் செர்கே கோடோவ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ்விற்கு வழங்கப்பட்ட சான்றிதழ்
எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ்விற்கு வழங்கப்பட்ட கேடயம்
இந்நிகழ்ச்சியில் விருது பெற்ற பிறர் குறித்த விபரம்
2. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[14 August 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36387
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல மகத்தான பணி பொதுவாக நம் காயல் மக்கள் சமூக நற்பணிகளில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள். அது நம் ரத்தத்தில் ஊறிபோன ஒன்று அதன் ஒரு வெளிபாடுதான் இது போன்ற விருதுகள் .
நம் மக்களில் நிறைய நபர்கள் இது போன்று பலமுறை ரத்த தானம் செய்தவர்கள் இருப்பார்கள் அவர்களில் திருச்சி காணி முஹம்மது முஹிதீன் குறிபிடத்தக்கவர் சற்றொப்ப 100 முறை தானம் செய்து இருக்கவும் வாய்புகள் இருக்கலாம். இது போன்றவர்களின் பட்டியலை நாம் மக்களுக்கு கண்டிப்பாக கவனத்தில் கொண்டு வந்து நல்ல ஆர்வத்தை மக்களிடம் கொண்டுவரலாம்.
4. CONGRATULATIONS AND MAY ALLAH ACCEPT THE GOOD DEEDS, AMEEN posted byV,M,T,MOHAMED HASAN (HONG KONG)[14 August 2014] IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 36396
AL-HAMDULILLAH.
SPECIALLY THE PEOPLE FROM OUR KAYALPATNAM WERE DOING THEIR BEST FOR THE COMMUNITY WHERE EVER THEY LIVE - ITS AN HUMANITARIAN ACT AND THE REWARD IS FROM ALMIGHTY ALLAH.
WE CONGRATULATE ALL THOSE WHO WERE SPENDING THEIR TIME, ENERGY, MONEY FOR THE WELFARE OF THE COMMUNITY AND GIVING BLOOD IS INDEED AN VERY NEEDY ACT AS WELL..
ITS AN LIFE SAVING ACT.. AND MAY ALLAH REWARD FOR THE SAME.
TO MY KNOWLEDGE, EVEN IN HONG KONG FEW OF OUR KAYALITES WERE REGULAR BLOOD DONORS INCLUDING MYSELF AND AS UNDERSTAND NEARLY 6 BROTHERS WERE DONATED MORE THEN 25 TIMES AND 3 OF THEM MORE THEN 50 TIMES... MASHA ALLAH.
WE PRAY ALMIGHTY ALLAH TO GIVE GOOD HEALTH, WEALTH AND HIGH ISLAMIC SPIRIT FOR ALL OUR BROTHERS,SISTERS AND ALL OF US... AND KEEP + SAFE OUR KAYALPATNAM AWAY FROM EVIL DISEASE AND GIVE SHIFA FOR THOSE WHO WERE SUFFEREING, AMEEN.
HEARTY CONGRATULATIONS TO SADAKATHULLA KAKA.
FEE AMANILLAH.
WASSALAM
YOUR BROTHER
V,M,T,MOHAMED HASAN
CAMP : HONG KONG
5. புண்ணியபணி போற்றப்பட வேண்டும்! posted byமுஹம்மது அதம் சுல்தான் (yanbu)[14 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36400
"சதக்கத்துல் ஜாரியா" என்ற சொல்லுக்கு செயல்வடிவ பொருள் என்னவென்று அறிய வேறு எங்கும் செல்லத்தேவையில்லை இந்த செய்தியை பார்த்தாலே போதும்.அந்த வார்த்தைக்குறிய உண்மையான பொருள் பொதிந்திருக்கிறது!
சிலர் தங்கள் வாழ்க்கையின் வறுமையின் நிமித்தம் இரத்ததானம் செய்கின்ற இந்த காலகட்டத்தில் சுமார் 47 தடவை எந்த பிரதிபலனும் பாராமல் செய்திட்ட இந்த உதவியால் பலரின் உள்ளத்தில் உயர்ந்து நிற்கின்றார் இச்சகோதரர்!
இங்கே கருத்து பதிந்த சகோதரர் சுலைமான் அவர்களின் கூற்றுப்படி பல சகோதரர்கள் தங்கள் உதிர உதவி முதல்
பலநன்மைக்குறிய சமுதாய சேவையை சத்தமின்றி செய்துகொண்டே தான் இருக்கிறார்கள்.அவர்களெல்லாம் வெளியில் தெரியப்படாமல் ஒரு வட்டத்தினுள்ளேயே உலாவிவரும் குலக்குன்றுகளாகும்! .
உதாரணதிற்கு சொல்லவேண்டுமென்றால்,பல சமுதாய இயக்கங்களும்,பலதன்னார்வு தொண்டு நிறுவனங்களும்
இரத்த தானம் முகாம் நடத்துவதிக்கொண்டிருக்கும் இக்காலத்திற்க்கெல்லாம் மிக மிக முந்திய காலத்திலிருந்தே நம்மூரில் யாருக்கு இரத்தம் தேவைபடுகிறதோ அது எந்த நேரமானாம் சரி இரவு பகல் எப் பொழுதிலும் உடனே ஓடோடிச்சென்று அவருக்கு இரத்தம் செலுத்தும் ஏற்பாட்டைஎந்த கைமாறுமின்றிச்செய்யும்,இளகிய இதயத்திற்கு சொந்தக்காரர் சகோதரர் கேஸ் "அன்வர்" அவர்களாகும்!
அவரின் தலைமையில் கீழ் இயங்கும் இப்புண்ணிய பணி
குழுவினருக்கு நம் சமுதாய மக்கள் மட்டுமல்ல மாற்றுமத சமுதாய மக்கள் வரை பாராட்டுகளைப்பெற்ற பெருமைக் குறியவர்கள் ஆவார்கள்!.
என்குடும்ப்திலுள்ளவருக்கூட அரிதான இரத்தவகை நபர்களை தேடிப்பிடித்து இரத்ததானம் செய்திட ஏற்பாடு செய்த அவருக்கு எங்கள் குடும்பம் மட்டுமல்ல பலரும் வாழ்நாள் நன்றிக் கடனுக்குள்ளானோர் என்று சொன்னால் அது மிகையல்ல!
இப் புண்ணிய சேவைக்குறியவருக்கு விரைவிலேயே வாழ்நாள் சாதனையாளர் என்ற மகுடத்தை அவர் பெரிதும் விரும்பும் அம்மாவின் கையினால் கிடைக்கப்பெற் வேண்டுமென்பதே என்போன்றோரின் அவா வாகும்! என் ஆவல் விரைவில் நிறைவேற வல்லோனை வேண்டுகிறேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
6. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[14 August 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36405
மாஷா அல்லாஹ்.
பெருமை படக்கூடிய ஒரு அறிய செயல். சகோதரர் எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது அவரின் தியாகத்திற்கு.
மெலிந்த உடலுக்குள் இவ்வளவு தியாக உணர்வா.! ஆச்சரியப் படத்தக்க மனிதர்.
முதலில், நானும் 12 நபர்களுக்கு இரத்தம் கொடுத்துள்ளேன்(அதில், 7 நபர்கள் அவுட் என்பது வேறு விசயம்). 12 முறை இரத்தம் கொடுத்ததை நான் பெருமையாக நினைப்பது உண்டு. ஆனால், என்று சகோதரர் எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ் அவர்களின் இரத்தக் கொடையை அறிந்தேனோ அன்று என் பெருமை எல்லாம் அழிந்து போனது.
வல்ல அல்லாஹ்.. இவருக்கு நீடித்த ஆயுளையும், நிறைவான ஆரோக்கியத்தையும், நிம்மதியான வாழ்வையும் அளிப்பானாக.
சரிங்க, பல நாள் சந்தேகம். ஏன் மருத்துவர்கள் இரத்ததனம் செய்வது இல்லை.? மிக சொற்ப மருத்துவர்களை தவிர...??..!!
8. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[14 August 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36427
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் ஊர் அருமை .சகோதரின் இந்த நற் செயலை......நாமும் மனதார பாராட்டுவோமாக .......அருமை சகோதர் தங்களின் பொது நல தொண்டுகள் .....செம்பட ....தொடரட்டும் ........
தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்றிட வேணும் ...என்று வாழ்த்தி .....தங்களின் உடல் நலத்துக்காக வும் மனம் உருகி வல்ல இறைவனிடம்
''' துவா செய்கிறோம் .........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross